ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 06

“வித்து முளைபோல் விரிந்தெங்கு நிற்குமே
ஒத்துளே நிற்கு முணர்வு”

மிக சிறிய விதையில் பெரும் செடியும் மரமும் உள்ளே அடங்கி இருக்கின்றது ஆனால் அது சரியான மண்ணும் நீரும் காற்றும் கிடைககும் வரை முளைத்து வளராது

அப்படியே மனதில் சிவம் இருக்கின்றது, அது உரிய பயிற்சியும் யோகமும் தவமும் செய்தால் சிவம் விஸ்வரூபமாக வளர்ந்து வியாபிக்கும்

மிக சிறிய ஆல விதையில் பெரும் மரம் இருப்பது போல, சிவம் மனதில் அடங்கியிருக்கின்றது, நீரும் மண்ணும் விதையினை முளைக செய்வது போல் பக்தியும் தவமும் சிவத்தை விழிக்க செய்து பெரிய ஒளியாக வளர்த்தெடுக்கின்றது என்பது குறளின் பொருள்