ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 09
“நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனாய் நிற்கும்அனைத்துயிர்க்குந் தானா மவன்”இக்குறள் “
நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்(ற்)மலனாய் நிற்கும் அனைத்துயிருக்கும் தானாம் அவன்” என பிரிந்து பொருள் தரும்
தன்னை நினைப்பவர் நெஞ்சத்துள் குற்றமற்ற பரிசுத்தமாய் (நிற்மலமாய்) நிற்பவன் சிவன், அந்த சிவன் அனைத்து உயிருக்கும் உரியவன் என பொருள்
எல்லா உயிர்களிலும் சிவன் இருந்தாலும் தன்னை யார் நினைத்து தவமிருப்பார்களோ தன்னை தேடுவார்களோ அவர்கள் நெஞ்சில் குற்றமில்லாமல் மும்மலம் களைந்து பரிசுத்தமாய் வீற்றிருப்பான்சிவன் குற்றமற்றவன் ,
மும்மலம் எனும் மூன்று மலங்களையும் (ஆணவன், கண்மம் , மாயை) என மூன்றையும் கடந்த பரிசுத்தமானவன், அவன் ஒரு நெஞ்சத்தில் எழவேண்டும் என்றால் அந்த நெஞ்சமும் குற்றமற்ற தன்மையினை அடையும் அல்லவா?
ஆம், சிவன் நிர்மலமான குற்றமற்ற பரிசுத்தமான பரம்பொருள், அவன் தன்னை தேடும் அடியார் நெஞ்சத்தை பரிசுத்தமாக்கி அங்கே வந்து அமர்வான் என்பது குறளின் பொருள்