ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 10

“ஓசையி நுள்ளே யுதிக்கின்ற தொன்றுண்டு
வாசமலர் நாற்றம்போல் வந்து”

இக்குறள் “ஓசையின் உள்ளே உதிக்கின்றது ஒன்று உண்டு வாசமலர் நாற்றம்போல் வந்து” என பொருள் தரும்

அதாவது மலரின் உள்ளே வாசம் உள்ளது போல ஓசையின் உள்ளே உதிக்கின்றது ஒன்று உண்டு என்பது பொருள்.

மலரின் மணம் இயல்பானது, ஆனால் அதை எல்லா உயிர்களும் உணர்ந்தாலும் அதனை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. தேனிக்கள் அந்த மணத்தை தேடி சென்று தேனை எடுக்கின்றன, பக்தியுள்ளோர் அதை கொய்து பகவானுக்கு படைப்பார்கள்

அப்படி ஓம் எனும் ஒலியில் சிவம் உள்ளது. அதை உணர்ந்தோர் முறைபடி அதனை ஓதி சிவனை உணர்வார்கள், அந்த பிரவண மந்திர ஓசையில் தியானித்து சிவனை உணரலாம் என்பதே குறளின் பொருள்