ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 02
“வாக்குங் கருத்து மயங்குஞ் சமயங்கள்
ஆக்கிய நூலினு மில்”
இக்குறள் “வாக்கும் கருத்தும் மயக்கும் சமயங்கள் ஆக்கிய நூலினும் இல்” என பிரிந்து வரும்அதாவது நன்றாக பேசும் வாக்கு வன்மை உடையோர் கொண்ட மதத்தின், மானிடரை மயங்க வைக்கும் கருத்துக்களை கொண்ட மதத்தின் சமய நூல்களிலும் முக்தி அடையும் வழி இல்லை என்பது பொருள்
இது இக்கால சூழலுக்கு மிகவும் சரியாக பொருந்துவதுதான் ஒளவை பெற்ற பெருஞானத்திற்கான சான்றுமிக நன்றாக பேசி பேசி மக்களை குழப்பும் அல்லது மயக்கும் மதம், எங்கள் மதம் இப்படியான பலனை தரும் என மதிமயக்கும் மதங்களின் நூல்களில் முக்தி நிலை இருக்க முடியுமா என்பது சந்தேகமே
அதாவது பேச்சிலும் கருத்திலுமே இவ்வளவு நுணுக்கமாக ஏமாற்றி மயக்கும் தந்திரங்களை கொண்ட மதங்களின் நூல் எப்படி இருக்கும் என யோசித்தாலே அதன் நம்பகதன்மை விளங்கும்ஒளவை அதைத்தான் உணர்ந்து போதிக்கின்றாள்
ஆம், முக்தி என்பதும் இறைவன் என்பதும் அடைய கூடிய விஷயம் அல்ல, மானிடர் ஓடி ஓடி பிடிக்க கூடிய இலக்கு அல்ல அது உணர்வில் அடைவது, ஈசனை முழுக்க உணர்வதே முக்தி என்பதுதான் குறளின் பொருள்