ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 09
“தற்பர மான சதாசிவத்தோ டொன்றில்
உற்றறி வில்லை யுயிர்க்கு”
இவ்வரி “தற்பரமான சதாசிவத்தோடு ஒன்றில்லை உற்ற அறிவில்லை உயிர்க்கு” என பிரிந்து பொருள் தரும்
தற்பரம் என்றால் இறைவன் என பொருள்
பரம்பபொருள் எனும் சதாசிவமாகிய சிவனோடு ஒன்றித்த நிலையில் உயிர்களுக்கெல்லாம் பாசம் எனும் அறிவு அற்றுபோகும், இந்த உலகின் உணர்ச்சிகளை கொடுக்கும் அறிவுகளை அற்றுபோகும் என்பது குறளின் பொருள்
அதாவது சிவனோடு மனம் ஒன்றித்தால் அந்நிலையில் பந்த பாசம், மாய லவுகீகம் என எல்லாவற்றில் இருந்தும் மனம் விலகி முழுவதும் சிவத்தோடு ஐக்கியமாகும் என்கின்றார் ஒளவையார்