ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 01
“கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில்
உருவின்றி நிற்கு முணர்வு.”
இக்குறள் “கருவின்றி வீடாக கருத்துற வேண்டில் உருவின்றி நிற்கும் உணர்வு” என பிரிந்து வரும்
கரு என்றால் இங்கு மானிட பிறப்பை குறிக்கின்றது
மீண்டும் பிறவாமல் வீடு எனும் முக்தி பேரை அடையும் பொருட்டு கருத்தாக இருந்தால் பரம்பொருள் மேலான ஞான உணர்வினை வளர்த்து தேகநினைவை முழுக்க அகற்ற வேண்டும்
தேகத்தில் மனதை வைத்து அதன் சுகங்களுக்கு அடிமையாவதை விடுத்து பரம்பொருளின் ஞானநிலையில் நிலைத்தால் ,தேக உணர்வுகளை விடுத்து ஞானநிலையினை தேடினால் மறுபடியும் பெண்ணின் வயிற்றில் கருவாகும் நிலை வராது என்கின்றார் ஒளவையார்