ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 04
“பளிங்கு வலம்புரி பானிகர்த்த தாகில்
துளங்கொளியாந் தூய நெறி”
இக்குறள் “பளிங்கு வலம்புரி பான் நிகர்த்ததாகில் துளங்கு ஓளியாம் தூய நெறி” என பிரிந்து பொருள் தரும்
முறையாக மூச்சு பிராணாயாம் செய்து யோகத்தின் உச்சிக்கு செல்லும் பொழுது பளிங்கு போல் வெண்ணிற ஜோதி அககண்களில் தெரியும்
அது தூய வழிக்கு சென்றதன் அடையாளம் என்பது குறளின் பொருள்
இங்கு “வலம்புரி பானிகர்த்த” எனும் வார்த்தைக்கு இருபொருள் உண்டு
முதலாவது அந்த வெண்ணிற ஒளி வலம்புரி சங்குபோல் வெண்மை பிரகாசமானது என்பது, இரண்டாவது யோகத்தில் ஓம் எனும் பிரணவம் அந்த ஞானயோக உச்ச நிலையில் துல்லியமாக கேட்பது
அது சங்கின் ஒலிபோல இருக்கும் என்பார்கள் ஞானியர்கள்
யோகநிலையின் உச்சத்தில் மனம் இந்த பிரபஞ்சத்தோடு கலந்துவிடும் அந்நேரம் தூய வெண்ணிற ஒளி பிரகாசிக்கும், அப்பொழுது ஓம் எனும் பிரணவமந்திரம் சங்கின் ஒலிபோல துல்லியமாக கேட்கும் , இந்த உலகை இயக்கும் அந்த நாதத்தை உணரலாம் என்பது ஒளவை சொல்லும் சித்த யோக ரகசியம்.