ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 06

“துல‌ங்கிய தூண்டா விளக்கொளி காணில்
விளங்கிய வீடாம் விரைந்து”

தூண்டா விளக்கு என்றால் அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த விளக்கு, குண்டலம் போன்ற அமைப்புடன் இணைந்திருக்கும் விளக்கு அது, அதில் விளக்கை ஏற்றிவைத்தால் யாரும் தூண்டாமல் அந்த விளக்கு எரியும், நந்துதல் எனும் திரி நகர்த்தல் இல்லாமல் எரிவதால் அதுதான் நந்தா விளக்கு

இது கோவில் கருவறையில் தொங்கவிடபட்டிருக்கும், இன்னும் பல இடங்களில் இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும்

இனி குறளை காணலாம்

தொங்கி கொண்டிருக்கும் விளக்கில் எரியும் சுடர் போல ஆன்மாவினை தன் அககண்களால் காணும் நிலை வந்தால் மோட்சவீட்டை அடையும் ஞானநிலை வந்துவிட்டது என பொருள் என்கின்றார் ஒளவையார்

யோகத்தின் உச்சத்தில் தன் ஆன்ம ஒளியினை ஒருவன் கண்டுவிட்டால் அவன் ஞானநிலையினை அடைந்துவிட்டான் என்கின்றார் ஒளவை மூதாட்டி