ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 07
“மின்மினி போன்ற விளக்காகத் தான்தோன்றில்
அன்னப் பறவையே யாம்”
மினிமினி போன்று ஒரு வெளிச்சம் ஞானகண்ணில் , அகத்தில் விளக்கு போல தோன்றினால் அன்னபறவை நிலையினை எட்டிவிட்டோம் என்பது பொருள்
அதாவது தியானத்தின் உச்சியில் அககண்களில் அல்லது மனதில் இருளில் மின்மினி பூச்சி ஒளிர்வது போன்ற ஒளியில் ஆத்மா தென்பட்டால் அவன் அன்னபறவை போன்ற தூய நிலையினை எட்டிவிட்டான் என்கின்றார் ஒளவையார்
அன்னபறவை வெண்ணிறமானது, சுத்தமானது, அது பாலையும் நீரையும் பிரித்தறியும் தெளிவு நிறைந்தது, ஞானத்தின் அடையாளமாக சரஸ்வதியின் வாகனமாக சொல்லட்டது
ஒருவனுக்கு மனதில் தன் ஜீவாத்மா சுடராக தெரியும் நிலை வந்துவிட்டால் அவன் ஞானம் அடைந்துவிட்டான், வீடுபேறு பெற தகுதியானவனாகிவிட்டான் என்பதை இப்படி உவமைகளால் சொல்கின்றார் ஒளவை