ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 09
“பரந்த விசும்பிற் பரந்த வொளிகாணில்
பரம்பரமே யாய வொளி”
விசும்பு என்றால் ஆகாயம் என பொருள்
இக்குறள் “பரந்த விசும்பில் பரந்தவொளி காணில் பரம்பரமே ஆய ஒளி” என பிரிந்து பொருள்தரும்
பரந்த ஆகாயத்தில் சூரிய வெளிச்சம் பரவி ஜொலிப்பது போல யோகத்தின் உச்சியில் பரபிரம்மத்தின் ஒளி தெரிந்தால் அந்நிலை முக்தி நிலையாகும்
யோகத்தின் உச்சியில் துரிய சக்கரம் துலங்கும், அச்சக்கரம் துலங்கும்பொழுது பெரும் ஒளிபிழம்பினை வானில் சூரியன் தெரிவது போல் அககண்ளால் காணலாம், அந்நிலை முக்தி நிலையாகும் என்கின்றார் ஒளவையார்