ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 02

“விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல்உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்”

இக்குறள் “விண நிறைந்து நின்று விளங்கும் சுடரொளி போல உள் நிறைந்து நிற்கும் சிவம்” என பிரிந்து பொருள் தரும்அ

தாவது ஆகாயம் எங்கும் நிறைந்து நிற்கும் பிரகாசமான வெளிச்சம், சூரிய ஒளிச்சம் போல மனதில் ஞான வெளிச்சமாய் சிவம் பரவி நிற்கும் என்பது பொருள்சிவனை ஒளிவடிவம் என்கின்றார் ஒளவையார்,

ஆகாயத்தில் சூரியன் வந்தால் ஆகாயமெங்கும் வெளிச்சம் வந்து அது பூமியின் எல்லா இடங்களிலும் வெளிச்சம் கொடுப்பதை போல மனதில் சிவம் வந்தால் மானிடனின் எல்லா குணமும் செயலும் சிந்தனையும் ஞானமயமாகும் என போதிக்கின்றார் ஒளவையார்..