ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 04

“ஆதாரத் துள்ளே யறிந்து சிவனுருவைப்பேதமற வர்ச்சிக்கு மாறு”

இக்குறள் “ஆதாரத்து உள்ளே அறிந்து சிவனுருவை பேதமற அர்ச்சிக்குமாறு” என பிரிந்து பொருள் தரும்

இங்கு ஆதாரம் என்பது ஆறு ஆதாரமான ஆறு சக்கரங்களை காட்டுகின்றது, அந்த ஆறு ஆதாரங்களையும் துலக்கினால் சிவன் உருவை உணரலாம், அதனை வேறு சிந்தனையின்றி (பேதமற) , ஒரே மனமாக அர்ச்சித்து அதாவது பூசை செய்ய வேண்டும் என்கின்றார் ஒளவையார்

யோகத்தில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூர கம், அநாகதம், விசுத்தி, ஆஞ்சை எனும் ஆறு சக்கரங்களும் துலங்கும் பொழுது இறைவனை உணரலாம், அந்த இறைவனை ஒரே சிந்தனையில் வணங்க வேண்டும், ஏக சிந்தனையிலே தவமிருந்து அதில் உணரபடும் இறைவனை ஒரே அடைக்கல நிலையாக வணங்குதல் வேண்டும்

ஒருமனமபட்ட தவம் வேண்டும் என்பது பொருள்அர்ச்சனை என்றால் வழிபாடு என பொருள்இக்குறளில் யோகத்தினால் ஆறு சக்கரங்களையும் துலக்கி ஒரே மனதாய் இறைவனை வணங்குதலே உன்னத வழிபாடு என்கின்றார் ஒளவையார்