ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 9 – அர்ச்சனை / குறள் : 08
“ஞானத் தாலாய வுடம்பின் பயனன்றே
மோனத்தா லாய வுணர்வு”
பரம்பொருளை ஞானத்தின் மூலம் உணர்ந்து கொள்வதே உடலின் பயன், அந்த ஞானம் மவுனத்தால் வரும் உணர்வால் வரும் என்பது பொருள்
ஞானத்தின் முதல்படி மவுனம், நிசப்தமான மவுனம். உடலாலும் மனதாலும் மவுனத்தில் அமர்ந்து அந்த பூரண அமைதியில் ஞானத்தை தேடி அந்த ஞான சாவியால் இறைவாசலை திறப்பது
உடம்பின் பலன் ஞானத்தை உணர்ந்து இறைவனை அடைவது, ஞானத்தை அடைய மவுனமே வழி என்கின்றார் ஒளவையார்