ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 10 – அர்ச்சனை / குறள் : 01

பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில்
முத்திக்கு மூ லமது.

இவ்வரி “பக்தியால் உள்ளே பரிந்து அரனை தான் நோக்கில் முத்திக்கு மூல்ம் அது” என பிரிந்து பொருள் தரும்

அதாவது மிக உன்னதமான பக்தியால் மனதிற்குள் சிவனை (அரனை) உற்று நோக்கி உணர்வதே முக்திக்கு மூலம் என்கினார் ஒளவையார்

வள்ளுவனும்,ஒளவையும், திருமூலரும் இன்னும் சிலரும் சித்தர் வகையினர், ஒ மிக உயர்ந்த நிலை ஆன்மீகத்தை எடுத்துரைப்பவர்கள். அவர்களின் ஆன்மீகம் எளிமையாக உரைக்கபட்டாலும் பக்தியின் உச்சநிலை மேன்மை அது

ஒளவையாரின் குறளும் அப்படி கோவில், சிலை, அபிஷேகம், விரதம், இதர லவுகீக வழிபாடுகளை கடந்து மனதால் தவம் செய்து இறைவனை அடையும் வழியினை எடுத்துரைக்கின்றது

பக்தியில் உன்னதனமானது புறநிலை வழிபாடுகாளான அபிஷேகமோ கொண்டாட்டமோ அல்ல, மனதில் இருக்கும் சிவனை உணர்வதே உண்மையான பக்தி, அந்த பக்திதான் முக்திக்கு வழிவகுக்கும் என்பது ஒளவை வாக்கு