ஓவர் பில்டப் செய்வதில் நம் ஆட்களை மிஞ்சவே முடியாது

ஓரு விஷயத்தை ஓவர் பில்டப் செய்வதில் நம் ஆட்களை மிஞ்சவே முடியாது

ரபேலே உலகின் தலைசிறந்த விமானம், அது ரேடாருக்கு சிக்காது ஏன் ஆண்டவனுக்கே சிக்காது , இமயமலையினை கட்டி வைத்தாலும் தூக்கிகொண்டு பறக்கும் என ஏக விளம்பரங்கள்

உண்மையில் ரபேல் அப்படி எல்லாம் அல்ல, நடுத்தரமானது

இந்திய விமானபடையின் மிக் ரக விமானம் மற்றும் பழைய மிராஜ் விமானங்களை மாற்றவே 100க்கும் அதிகமான நவீன விமானம் வேண்டுமென்று இந்திய விமானபடை கோரியது, மத்திய அரசு தன் பட்ஜெட்டுக்கு ஏற்ப விசாரிக்க சொன்னது

பிரிட்டனின் டைபூன் யூரோபைட்டர் போன்றவை விலை மிக அதிகம் என்பதால் தள்ளபட்டது, அமெரிக்கா எப் ரக விமானங்களை தராது . ரஷ்யாவின் தந்திரம் மிக் ரகத்தை பெயின்ட் அடிப்பதிலும் சுகோய் ரகத்தை தள்ளிவிடுவதிலுமே இருந்தது

ஆக விலையும் அதிகமாக இருக்க கூடாது அதே நேரம் ஓரளவு தரமான ரகம் வேண்டும் என்பதால் ரபேல் தேர்ந்தெடுக்கபட்டது

நிச்சயம் ரபேல் நவீன ரகமே ஆனால் டைபூன், எப் 35, சு 57 போன்ற ரகங்கள் அருகில் வராது, காரணம் இவை ஸ்டெல்த் எனப்படும் 5ம் தலைமுறை மற்றும் ராடாரில் சிக்கா ரகம்

இது போக ஏகவிஷயங்கள் உண்டு

அதனால் ரபேல் உலகின் அதிசிறந்த விமானம் என சொல்வதை நம்பாதீர்கள், ஆனால் பாகிஸ்தான் மற்றும் சீனாவினை சமாளிக்க இது போதும்

பாகிஸ்தானை சமாளிக்க 1960 மிக் ரகமே போதும் எனும்பொழுது ரபேல் என்பது மகா கூடுதல் பலம் என்பதில் சந்தேகமில்லை