கங்கை சுத்தமாகிகொண்டிருக்கின்றது என்பதை விட இந்தியனுக்கு என்ன வேண்டும்?

Image may contain: sky, outdoor and water

இந்த கொரோனா என்பது மானிட உயிர்களை எடுத்து மனுகுலத்தை வீட்டுக்குள்ளும் மருத்துவமனைக்குள்ளும் அடைத்தாலும் இயற்கைக்கு அது கொடுத்திருப்பது மறுபிறப்பு

விமானங்களும், ரயிலும், தொழிற்சாலைகளும் இயங்கவில்லை என்பதால் காசு மாசுபாடு, நீர் மாசுபாடு மிக மிக அதிகம் குறைந்து அவை சுத்தமாகின்றன‌

கடற்கரைகள் சுத்தமாய் கிடக்கின்றன, கழிவுகள் கலக்காததால் ஆறுகள் ஆதிகாலத்தில் ஓடிய அந்த தூய சாயலை அடைந்துவிட்டன‌

பூமி குளிர்கின்றது , அண்டார்டிக்கா பனிபாறையின் அளவு அதிகரிக்கின்றது

பூமியே மறு வடிவம் எடுக்கின்றது

விஞ்ஞானமும் இந்து புராணங்களும் ஒரு விஷயத்தை ஒப்புகொள்ளும், ஒரு புள்ளியில் இரண்டும் சந்திக்கும் அது உலகம் தன்னை புதுப்பித்து கொள்வது

பூமியில் எல்லா உயிருக்கும் ஒரு சமநிலை உண்டு, ஒரு உயிர்மட்டும் பலுகி பெருகி மற்ற எல்லாம் அழிய ஒரு சக்தி சம்மதிப்பதில்லை

டைனோசர் காலம் என ஒன்று இருந்திருக்கின்றது, அது பலுகி பெருகி பூமியினை ஆட்டி வைத்தபொழுது அந்த சக்தி இறங்கி டைனோசர் குலத்தையே ஒழித்தது, இப்போது அவற்றின் எலும்பு கூடே மிஞ்சிற்று

இன்னும் ஏக விலங்குகள் உண்டு, எதெல்லாம் மிதமிஞ்சி ஆடுமோ அதெல்லாம் அழித்து அல்லது கட்டுபடுத்தபட்டு இயற்கை தன் சமநிலையினை பேணும்

நாளையே கடல் மீன்களை மனிதன் உண்ணாமல் இருக்கட்டும், அட திமிங்கலமும் சுறாவும் கூட சைவமாகட்டும் அப்பொழுதும் மீன்களை கட்டுபடுத்தும் சக்தி இயற்கைகு உண்டு

நீர் மிகு கடல் அல்ல, காற்றுகடல் அடியில் வாழும் மனிதன் எனும் விலங்கும் அதற்கு தப்பமுடியாது

மனிதனும் ஒரு விலங்கே ஆனால் ஆன்மா தங்கும் விலங்கு என்பதால் அவன் இயக்கம் வித்தியாசமானது அவ்வளவுதான்

அந்த மனுகுலம் எல்லை மீறி ஆடும்பொழுதெல்லாம் ஊழிபிரவாகம் வந்து காவு வாங்கி அவனை ஒழித்து பூமியினை சமபடுத்தியிருக்கின்றது, பின் மெல்ல மீள் உருவாக்கம் செய்கின்றது

பிரளயம் நடக்கவில்லை என எந்த மதமும் சொல்லவில்லை, இன்னும் நடக்காமலே போகும் என்றும் அவை சொல்லவில்லை

ஆம், மனுகுலம் தான் என்ற அகம்பாவத்தில் இப்பூமியில் சக உயிர்களையும் அக்தினை பொருட்களையும் அழித்து ஆடினால் அவன் மேலும் இயற்கை தன் கோபத்தை காட்டும்

அதில் இந்த கொரோனா ஒரு எச்சரிக்கை

கொரொனாவால் விளைந்த விஷயங்களில் இந்தியாவின் புண்ணிய நதியான கங்காவும் யமுனாவும் சுத்தமானதும் ஒன்று

கங்கையின் தூய்மை 60% வந்திருக்கின்றது, ஆம் இயங்கா தொழிற்சாலைகள் முதல் போக்குவரத்தும் இல்லாத நிலையில் அது சாத்தியமாயிற்று

இந்தியாவில் எக்காலமும் ஒரு நம்பிக்கை உண்டு

காசி வாழ வாழ இந்தியா வாழும் என்பது அது

காசி காசியாக கங்கை கங்கையாகவே இருந்த பொழுதெல்லாம் ஆச்சரியமாக இந்தியா தன் பொற்காலங்களில் மின்னியிருக்கின்றது

காசி மாசடைந்த பொழுதெல்லாம் அது பின்னடைந்திருகின்றது

மோடி வாரனாசிக்கு வந்த பின் முடிந்தவரை அதை சுத்தபடுத்தினார், இந்தியா மெல்ல பலமானது , தேசத்தின் அனைத்து கனவுகளும் நனவாகி கொண்டே வந்தது

இப்பொழுது கங்கையும் மகா சுத்தமாகி கொண்டிருக்கின்றது, பகீரதன் அழைத்து வந்தபொழுது இருந்த‌ அந்த புண்ணிய தன்மையினை கங்கைக்க்கு கொரோனா மீட்டு கொடுத்திருக்கின்றது

இவை எல்லாம் எங்கிருந்தோ இயக்கபடும் கணக்குகள், மானிட அறிவுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் புரியாது அதற்கு அவசியமுமில்லை

ஆக கொரோனா என்பது இயற்கை கொடுத்திருக்கும் மெல்லிய எச்சரிக்கை, இதே எச்சரிக்கை இன்னும் பயங்கரமாகி காற்றும் நீரும் நிலமும் நோய் பரப்பும் தன்மை கொண்டால் நொடியில் அழியும் மானிட இனம்

அதை மனதில் நிறுத்தி பெரும் மாறுதலுக்கு உட்பட வேண்டியது மானிட இனத்து கடமை இல்லையேல் கொரோனா பெரும் வேகத்தில் பல வடிவு எடுத்து வரலாம்

மானிடனால் பாதிக்க பட்ட பூமிக்கு மெல்லிய அறுவை சிகிச்சையினை செய்து கொண்டிருகின்றது இயற்கை, அதில் மானிட இனம் அலறுகின்றது , பூமி நலம் பெற்று கொண்டிருகின்றது

அதில் கங்கை சுத்தமாகிகொண்டிருக்கின்றது என்பதை விட இந்தியனுக்கு என்ன வேண்டும்?