கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கின்றது பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை

கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கின்றது பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை என பல கேள்விகள் எழும்

விலையினை குறைக்க அரசுக்கும் விருப்பமே, எந்த அரசும் விலையினை ஏற்றி வைக்க விரும்பாது, சிக்கல் எங்கிருக்கின்றது?

இந்திய ஆயில் நிறுவணங்களின் பணியாட்களின் சம்பளத்திலும், சலுகையிலும் இருக்க்கின்றது. அவ்வளவு சம்பளம்

இந்த விலைக்கு பெட்ரோல் விற்றால்தான் அவர்கள் சம்பளமே கொடுக்கமுடியும், இதுபோக பென்சன் , ஓய்வுநிதி பல்க் கமிஷன் அது இது என பல விஷயங்கள்

பெட்ரோல் விலை குறைத்து விற்கபடும் பட்சத்தில் ஆயில் நிறுவண ஊழியர் சம்பளமும் பல கமிஷனும் குறைக்கபடும், யார் சம்மதிப்பர்?

பெட்ரோல் விலை குறைந்தால் சம்பளமும் குறைக்கபட வேண்டும் அல்லவா? 40 ரூபாய்க்கு பெட்ரோல் விற்றால் கம்பெனியின் லாபம் பாதிப்பு அதனால் உங்கள் சம்பளம் பாதியாகும் என அறிவிக்கபட்டுத்தான் ஆக வேண்டும்

ஆனால் ஏற்பார்களா? பெட்ரோல் ஊற்றி கொளுத்தி சாவார்கள்.

ஊழியர் சம்பளம் அப்படி, எக்காரணம் கொண்டும் குறைக்க முடியாது, இதனால்தான் பல விஷயங்களில் அரசு தடுமாறுகின்றது.

இதோ தமிழக அரசு ஊழியரான ஆசிரியர் 
கொடி பிடிக்கின்றார்கள், அவர்களுக்கு சம்பளம் இன்னும் வேண்டுமாம், நிறைய வேண்டுமாம்

அவர்கள் செய்யும் 6 மணிநேர வேலைக்கும், சனி ஞாயிறு விடுமுறைக்கும் இன்னும் இருக்கும் விடுமுறைக்கும் சலுகைகளுக்கும் இந்த சம்பளம் மிகபெரும் தொகை

அதுவும் போதாது என கொடிபிடித்தால் என்ன செய்வது?

சரி இந்த வேலையின் சம்பளம் போதவில்லை என்றால் கிளம்பலாம் அல்லவா? அதெல்லாம் செய்ய மாட்டார்கள்

ஆசிரியர்களுக்கு மாத சம்பளம், தேர்வுக்கு கண்காணிப்புக்கு சம்பளம், தேர்வு தாளை திருத்தவும் சம்பளம்

இப்படி ஒரு கொடுமை எங்காவது உண்டா?

மேமாதம் என்ன வகுப்பு? பின் எதற்கு இவர்களுக்கு தேர்வுதாள் திருத்த தனி தொகை?

நிச்சயம் அவர்களை நன்றாக கொடுத்து கெடுத்து வைத்திருக்கின்றோம்

இந்நிலை எப்படி வந்தது?

எல்லாம் அரசியல், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களே தேர்தல் பணியாளராய் பயன்படுத்தபடுகின்றனர் என கணித்து அவர்களுக்கு அள்ளிகொடுத்த லஞ்சம்

உண்மையில் இந்த ஆசிரியர்கள் வாங்கிகொண்டிருப்பது சம்பளம் அல்ல, லஞ்சம். தேர்தல் காலத்தில் நினைவில் வைக்க வேண்டிய லஞ்சம்

அதில் ராமசந்திரனும் கலைஞரும் கவனமாக இருந்தார்கள்.

அப்படி பெருகியதுதான் இந்த கொள்ளை சம்பளம்

இப்பொழுது இவர்கள் வாங்கும் சம்பளத்தின் 10ல் ஒரு பங்கு கொடுத்தாலே அதனை செய்ய பல்லாயிரம் பேர் வெளியில் காத்திருக்கின்றார்கள்

இவர்களுக்கு எல்லாம் என்ன செய்ய வேண்டுமென்றால் இனி வேலை செய்யும் நேரத்தை பொறுத்துதான் சம்பளம் என்று அறிவிக்க வேண்டும்

தைரியமாக அறிவிக்கலாம், அவர்கள் போனால் ஆயிரம் பேர் பின்னால் நிற்கின்றார்கள்.

மிஸ்டர் பழனிச்சாமி உலகமே அழிந்தாலும் மச்சாவாதாரம் எடுத்து உங்களை காக்க மத்திய அரசு இருக்கின்றது, பின் ஏன் பயப்பட வேண்டும்?

இன்னும் ஏன் கூடுதல் சம்பளம்? வட்டிகடை வைப்பதற்கா என தைரியமாக கேளுங்கள்

அந்த பீனிக்ஸோ, பிராய்லர் கோழியோ அதன் வழியில் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்புங்கள்