கடலடியிலும் காவல் நிலையம் அமைக்க உலகம் தயாராகிகொண்டிருக்கின்றது

எவ்வளவுதான் பாதுகாப்பிட்டாலும் திருட்டு கடத்தல் கோஷ்டி புது புது பாதைகளில் கடத்தலை செய்யத்தான் செய்யும்

ஆம் போதைபொருளை நம்ம ஊரில் பருத்தி விளைவிப்பது போல் விளைவிப்பவை கொலம்பியா மெக்ஸிகோ நாடுகள், நம்பர் 1 சரக்கு என்பதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விலை அதிகம்

ஆபத்தான பொருள் என்பதால் பாதுகாப்பும் அதிகம்

ஆனால் பணத்தில் கொழிக்கும் கும்பல் எப்படி எல்லாமோ அனுப்பும், கர்ப்பிணி பெண்ணின் உடலை கிழித்து உள்ளே வைத்து தைத்து அனுப்புதல், லேட்பாப்புக்குள் வைத்து அனுப்புதல் மருத்துவகுழு மருந்து பொருளோடு அனுப்புதல் என அவை கடும் சவால் எடுக்கும்

கொலம்பியா மெக்ஸிகோ அரசுகள் எல்லாம் அவர்கள் சொற்படி ஆடுவதால் அரச விமானங்கள் கூட கடத்தலுக்கு பயன்படும் ஆனால் வெளிநாடுகள் பிடித்துவிடும்

அடுத்து கப்பலில் கடத்தினாலும் பிடித்தார்கள்

இதனால் சொந்தமாக நீர்மூழ்கி கப்பல் வாங்கி அதில் கடத்தலை ஜரூராக செய்திருக்கின்றது கோஷ்டி

மிக சாமார்த்தியமாக சிறு நீர்மூழ்கியில் ஏற்றி கடத்தியிருக்கின்றார்கள் சில பல தடவை அது ஸ்பெயினின் கடலடி ரேடாரில் சிக்கியிருக்கின்றது அவர்கள் திமிங்கலம் என விட்டுவிட்டார்களாம்

நேற்று இது திமிங்கலம் மாதிரி வளைந்து செல்லவில்லை புள்ளி வைத்து இழுத்தது போல் நேராக செல்கின்றதே என சந்தேகபட்ட ஸ்பெயின் கடற்படை இவர்களை பிடித்து விசாரிக்க உலகம் அதிர்ந்தே விட்டது

எத்தனை கிலோ இதுவரை கடத்தினார்கள் என்ற தகவலை கேட்டு ஆடிபோய் இருக்கின்றது ஐரோப்பா

ஆம் 5000 கிமீ தூரத்தில் இருந்து அசால்ட்டாக கடத்தி வந்திருக்கின்றது கோஷ்டி , எப்படியோ தமிழ் சினிமா கோஷ்டிகளுக்கு ஒரு காட்சி கிடைத்தாயிற்று

இனி என்னாகும்?

இனி கடலடியிலும் காவல் நிலையம் அமைக்க உலகம் தயாராகிகொண்டிருக்கின்றது,