“கடலோர கவிதைகள்” படம் ஓடிகொண்டிருக்கின்றது…
“கடலோர கவிதைகள்” படம் ஓடிகொண்டிருக்கின்றது, சத்யராஜ் மிக அசால்ட்டான நடிப்பில் பின்னி எடுத்தபடம், பாரதிராஜா எனும் கலைஞன் உயிரொடு இருந்த காலங்கள் அவை, இப்பொழுது இருப்பவர் பழைய பாரதிராஜா அல்ல.
முட்டம் கடற்கரையும், அந்த ஆலயமும், மீணவர் வாழ்வும் , முரட்டுதனமும், அந்த கடற்புர மனிதர்களின் முகமும் அப்படியே பிரதிபலித்த படம்
பாடல்களும், இசையும் மகா அற்புதம். கங்கை அமரன் சில பாடல்களின் அழகில் மகா உயரத்தில் இருந்தார்.
படத்தில் ஒரே குறை, அந்த டீச்சர் ஒரு பெரும் ரவுடியினையே கன்னத்தில் அறைகின்றார் என்றால், பெரும் தைரியமும் அழகும் கொண்ட நடிகையே அந்த பாத்திரத்திற்கு மிக சரியாக பொருந்தும்
அப்படி குஷ்பூதான் பொருந்தியிருப்பார்
குஷ்பூ மட்டும் அந்த பாத்திரத்தில் நடித்திருந்தால், அன்றே தமிழக ரவுடிகள் எல்லாம் ஒற்றைகாலில் நின்று திருந்தியிருப்பார்கள்,
தமிழகம் ரவுடிகள் இல்லா மாநிலமாக இருந்திருக்கும்