கடவுளுக்கு அர்பணிக்கபட்டவள் என பொருள்படும் “நிவேதிதை”

இந்துமதம் உண்மையான ஞானதேடலும் பிரபஞ்ச தத்துவமும் ஆன்ம ரகசியங்களை அறிந்துகொள்ள துடிப்போர் எங்கிருந்தாலும் ஏற்றுகொள்ளும், மதங்களின் தாயான அந்த தாய் மானிட லவுகீக தேவைகளை விட ஞானமே பெரிதென தேடிவருக்கெல்லாம் தன் மடியில் இடம் கொடுத்து ஞானம் ஊட்டும்

அப்படி பல சாட்சிகளை உலகம் கண்டிந்தாலும் ஒப்பற்ற பெரும் சாட்சி சகோதரி நிவேதிதா

அவள் இயற்பெயர் மார்கரட் எலிசபெத் நோபல், 1867ல் பிரிட்டனின் அயர்லாந்தில் பிறந்தார், அக்காலத்தில் இந்தியா பிரிட்டனின் அரச கட்டுபாட்டில் இருந்தது, இந்தியர் பற்றியும் இந்துமதம் பற்றியும் மிக இழிவான கருத்துக்கள் அப்பொழுது வலம் வந்தன‌

இந்த மார்கரட்டுக்கு ஆன்மீக தேடல் இயல்பாக இருந்தது, சிறுவயதிலே அவளின் கேள்விக்கு பாதிரிகள் பதில் சொல்லமுடியாமல் கண்டிக்க தொடங்கினர், பின் அவள் புத்தனின் கொள்கையில் ஞானம் அடைய முடியுமா என தேடினாள் அதுவும் முழுமையில்லை

தன் கேள்விக்கு எங்கு பதில் கிடைக்கும் என அவள் திரிந்தபொழுதுதான் அவளின் 28ம் வயதில்தான் சுவாமி விவேகானந்தரின் உரை பற்றி கேள்விபட்டாள், அவரை தன் தோழியின் வீட்டில் சந்தித்தாள்

அவளின் எல்லா கேள்விக்கும் குழந்தைக்கு உணவூட்டும் அன்னையின் சாயலில் பதிலளித்தார் சுவாமிஜி, அவளின் 20 வருட தேடலின் எல்லா விடையற்ற கேள்விக்கும் விவேகானந்தரிடம் பதில் இருந்தது

யார் தன் கேள்விக்கு பதிலளிக்கமுடியுமோ, யாரால் தன் சந்தேகங்களையெல்லாம் போக்கி அடுத்த நிலைக்கு நகர்த்தமுடியுமோ அவரே குரு என தன் குருவாய் அவரை பணிந்தாள் எலிசபெத் மார்கரெட்

சுவாமி அவளுக்கு இந்துமத சிறப்புக்களை ஞானத்தை விளக்கிவிட்டு நாடு திரும்பினார்

ஆனால் ஐரோப்பிய மத நடுவில் அவளால் தனித்து இருக்கமுடியவில்லை, இழிவானது அர்த்தமற்றது பொருளற்றது என கருதபட்ட இந்துமதத்தில் அவளால் அங்கு நீடிக்க முடியவில்லை, அடுத்த ஆண்டுகளில் 1898ல் தாயினை தேடி வரும் கன்றாக கல்கத்தா வந்து சேர்ந்தாள்

சுவாமி அவளுக்கு தீட்சை கொடுத்து கடவுளுக்கு அர்பணிக்கபட்டவள் என பொருள்படும் “நிவேதிதை” என பட்டமும் கொடுத்தார்

சுவாமி விவேகானந்தர் அவளுக்கு இந்துமத பெருமையும் இந்துக்களின் ஞான வாழ்வினையும் எடுத்து உரைத்தார், அவளின் சிந்தனை சூரியனை போல் பிரகாசித்தது

சுவாமி எனும் ஞானஜோதியின் சுடராய் அவள் விளங்க துலங்கினாள்

இந்தியரின் துயரத்துக்கு காரணம் அவர்கள் மதம், அவர்கள் வழிபாடு என மேற்குலகம் கற்பித்ததெல்லாம் எவ்வளவு பெரும் பொய் என்பதும், மேற்கின் ஆன்மீகம் ஒரு அரசியல் ஆயுதம் என்பதும் அவளுக்கு விளங்கிற்று

இந்து ஞானமே முழு ஆன்ம தரிசனத்தை தரும் என்பதை அனுபவமாக உணர்ந்தாள்

தியானமும் தவமும் அவளை செம்மையாக்கின, அன்னை சாரதாதேவி அவளை இன்னும் பட்டை தீட்டினாள்

சுவாமி இந்துக்கள் வீழ்ந்த வரலாற்றையும், இந்துக்களின் அறியாமை போகவைத்தால் இத்தேசம் செழிக்கும் என்பதை உணரவைத்தார், அவளிடம் தன் பிரசித்தியான வசனத்தை சுவாமி போதித்தார்

“இந்துஸ்தானம் எனும் இந்த கழுகு எழுந்து பறக்க ஆண் பெண் எனும் இரு சிறகுகள் அசைய வேண்டும்” என அவர்தான் தன் கனவினை விதைத்தார்

அதுதான் பெண்கள் கல்விக்கான முதல் கல்வி நிலையமாக கல்கத்தாவில் உருவானது

கல்கத்தாவில் 1898, நவம்பர் 13 ஆம் நாள், எண் 16, போஸ்பாரா தெருவில் ஒரு வீட்டில் பெண் கல்வி தொடங்கபட்டது, அந்த நாள் காளிபூஜை எனும் விஜயசதமி நாளாய் இருந்தது.

அன்னை சாரதா தேவி அதனிஅ திறந்து வைத்தாள், அன்று மனமுருக சொன்னாள் நிவேதிதா”அன்னையின் ஆசியை விட வேறு நல்ல சகுனத்தை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. எதிர்காலத்தில் சிறந்து விளங்கப்போகும் படித்த பெண்ணினத்திற்கு இதைவிட நல்ல சகுனம் ஏதும் இருக்க முடியாது”

அந்த வார்த்தைகள் சத்தியமாய் பலித்தன

பின்னாளில் முத்துலட்சுமி ரெட்டி முதல் இன்றை நிர்மலாசீத்தாராமன் வரை காணும் பொழுது இவ்வரி நினைவுக்கு வராமல் இருக்க முடியாது

அதன் பின் சுவாமியின் நிழலாய் மாறினாள் நிவேதிதா, குருவின் செருப்பாய் அவரை தாங்கி நின்றாள்

1899ல் தன் இரண்டாம் உலக பயணத்தை துவக்கினார் சுவாமிஜி, அவரோடு அவளும் சென்றாள், பின்னாளில் தான் எழுதிய ” ’தி மாஸ்டர் அஸ் ஐ சா ஹிம்” எனும் பிரசித்தியான நூல் அப்பொழுதுதான் அவளால் தொடங்கபட்டது

நியூயார்க்கில் ” ’ராமகிருஷ்ண தொண்டர் சங்கம்” எனும் சங்கத்தை நிறுவி இந்துமத பெருமை, இந்து பெண்களுக்கு செய்யவேண்டிய கடமைகள் குறித்து விளக்கமாக பேசினார்

அதுவரை இந்துமதம் என்றால் தாழ்ந்தது பிற்போக்கானது என நம்பிய அமெரிக்கா 1893க்கு பின் மாறியிருந்தது, நிவேதிதா அதை இன்னும் மாற்றினாள்

இந்துமத பெருமையும் இந்துமத சிறப்பும் பாரத கலாச்சாரமும் அவளால் மேற்குலகில் உயர்ந்தது

தங்கள் இனத்து பெண் தங்கள் அடிமை இந்தியாவில் இந்து சாமிபரதேசிகளோடு சுற்றி இந்துமதம் என திரிவது அவர்களுக்கு பொறுக்காதல்லவா? பெரும் எதிர்ப்பும் வலுத்தது, அதுவும் மதமாற்ற கும்பல் அவளை வார்த்தையால் நடவடிக்கையால் வதைத்தது

அதையெல்லாம் ஞானிக்குரிய பக்குவத்தோடு கடந்து சென்றார் நிவேதிதா

ஒரு அன்னிய பெண்மணி மதிப்புமிகு விவேகானந்தர் எனும் ஞானியின் சீடரானதும் சுவாமி அவளுக்கு தீட்சை கொடுத்ததும் இந்துக்களிடம் இந்துக்களில் கற்றோரிடமும் பெரும் மரியாதையினை கொடுத்தன‌

ஜெகதீஸ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர் போன்றோர் அவரை மிக மரியாதையான ஞானபிம்பமாக ஏற்றனர்

இந்நிலையில் 1902ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் சித்தியடைந்தார், ஆம் அவள் அவருக்கு குருவாக பணிவிடை செய்தது நான்கு ஆண்டுகளே

ஆனாலும் தனக்கு ஞானமளித்து தன் கர்மாவினையும் ஆத்மாவினையும் உணரவைத்து , தன்னை தனக்கு யார் என காட்டிய தன் குருவுக்காக இங்கே தங்கினாள் நிவேதிதா

காவி உடை அணிந்து நீறு பூசி குங்குமமிட்டு பாரத பெண்ணாக பெண் கல்வியும் பெண் விடுதலையும் பேசினாள்

ஆனால் மிஷனரிகள் அவளுக்கு பெரும் நெருக்கடி கொடுத்தனர், மிக பெரிய சிக்கலெல்லாம் வந்தன ஆனாலும் அவளின் சேவை தொடர்ந்தது

அப்பொழுது வந்த பெரும் கொள்ளை நோயிலும் அவள் அகலவில்லை, இந்திய தேசத்துக்காய் மிக பெரிய தொண்டு நடவடிக்கையில் ஈடுபட்டாள், அவளின் சேவைக்காக கல்கத்தா நகரமே அவளை வணங்கிற்று

கல்கத்தாவில் பெரும் பிம்பமாய் நின்றவளை நாடெங்கும் இந்துக்கள் அழைத்து பேச வைத்தார்கள்

அப்படித்தான் 1902ம் ஆண்டு சென்னைக்கும் வந்தார் நிவேதிதா

“இந்து இளைஞர் சங்கம்” அந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது, பச்சையப்பா பச்சையப்பா அரங்கத்தில் டிசம்பர் 20ஆம் தேதி ’இந்தியாவின் ஒருமைப்பாடு’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தமிழக மக்கள் அவளை கொண்டாடினார்கள், பெரும் வரவேற்பு அவளுக்கு கிடைத்தது, சென்னை நகரமெங்கும் ஏகபட்ட கூட்டங்கள் அவருக்கு தயாராயின‌

சித்தாரிப்பேட்டையில் நிவேதிதை நிகழ்த்திய சொற்பொழிவு குறித்து 1902 ஆம் ஆண்டு டிசம்பர் மாத ’த மெட்ராஸ் மெயில்’ பத்திரிக்கை மிகவும் புகழ்ந்திருந்தது.

கிட்டதட்ட ஒருமாதம் சென்னையில் தங்கியிருந்து பேசினார் நிவேதிதா, 1903 ஜனவரி 20 ஆம் தேதி சென்னையில் கொண்டாடப்பட்ட சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி விழாவிலும் வந்து கலந்து கொண்டார்

இந்த காலகட்டத்தில்தான் மகாகவி பாரதியார் அவளை சந்தித்தார் அதுவரை பெண் விடுதலை கல்வி பற்றி அதிகம் பேசாத பாரதி, அவளின் உரையில் பெண் கல்வி அவசியமும் சுவாமி விவேகானந்திரின் ஞானமான உருவாக்கத்திலும் கரைந்தார்

உங்கள் மனைவி எங்கே என அம்மையார் கேட்க, அவள் எதற்கு இங்கே என பாரதி சொல்ல “சக மனைவியினை மதிக்க தெரியாதவர் எப்படி தேசத்தை தேசத்து மக்களை மதிக்கமுடியும்?

சுவாமிஜி பெண்விடுதலை பற்றி சொன்னதை நிறைவேற்றாமல் எப்படி நீங்கள் இங்கு மாற்றம் கொண்டுவரமுடியும் பாரதி” என சொல்லி சுவாமியின் எல்லா கனவுகளையும் உண்மைகளையும் போதித்தார்

அந்த இடத்திலே “தாயே நீயே என் குரு” என அவளை பணிந்து குருவாக ஏற்றுகொண்டார்

ஆம், பாரதியின் வாழ்வு நிவேதிதையின் சந்திப்புக்கு பின்பே மாறிற்று, அதுவரை தேசியம் பேசியாக கவியாக கண்டதையும் பாடும் கவியாக இருந்த பாரதி, நிவேதிதையினை தன் குருவாக ஏற்றபின்பே மாறினான்

அதன் பின்பே தேசியம் தெய்வீகம் தவிர எதையும் எழுதமாட்டேன், என் அற்புத கவியும் எழுத்தும் நாட்டுக்கும் இந்த மதத்துக்கும் மட்டுமானது என முடிவெடுத்தான்

அவனின் அற்புதமான கவிதைகளும், ஆச்சரியமான தீர்க்கதரிசனங்களும், என்றும் முழங்கும் தேசிய மற்றும் பெண்விடுதலை பாடல்களும் அதன் பின்புதான் வந்தது

கல்கத்த்தா திரும்பி உணர்ச்சி பூர்வமாய் நின்றார் நிவேதிதா

கல்கத்தா என்பது மிஷனரிகளால் குறிவைக்கபட்ட இடம், பஞ்சாப் தமிழகம் வங்கம் என மூன்று இடத்தை மிஷனரிகள் குறிவைத்தார்கள், தமிழக தென்பகுதி அவர்களுக்கு வெற்றியாயிற்று சென்னையிலும் ஆதிக்கமானார்கள்

பஞ்சாபில் அவர்களால் கால் ஊன்றமுடியவில்லை

வங்கத்தில் ராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் பெரும் சுவராக எழும்பினார்கள், விவேகானந்தர் காலமானதும் மிஷனரிகள் உற்சாகமானார்கள், அங்கு புயலென நின்றார் நிவேதிதா

“’அவர் மறையவில்லை. நம்மிடையே இருந்து வருகின்றார்’ என்றும் ’வருந்திக் கொண்டிருப்பதை விட மேலும் பணிசெய்ய விரும்புகிறேன்” என அவர் சுவாமியின் பணிகளை தொடர்ந்தார்

பிரிட்டிஷ் அரசு மூலம் மிஷனரிகள் பெரும் நெருக்கடி கொடுத்தார்கள், ராமகிருஷண இயக்கம் தடை செய்யபடும் அளவு நிலமை போயிற்று

அதனை காக்க அங்கிருந்து வெளியேறி தனியாக மடம் தொடங்கி சேவையினை தொடர்ந்தார் நிவேதிதா

அவரின் பள்ளியில்தான் முதன் முதலில் “வந்தே மாதரம்” பாடபட்டது

இந்தியரின் நாடி நரம்பெல்லாம் ஊறிவிட்ட, இன்றும் உணர்ச்சிமிக்க கீதமான அப்பாடலை முதலில் பள்ளியில் பாட வைத்தவர் அவர்தான், அவரை தொடர்ந்துதான் பாரதி “வந்தே மாதரம்” என்போம் என பாடினான்

அடுத்த 9 ஆண்டுகள் கடும் சேவையினை இந்து மத சேவையிலும் பாரத பண்பாட்டு மீட்சியிலும் பாடுபட்டார், காசி அவருக்கு பிடித்தமான தலமாயிற்று

42 வயதை எட்டியபொழுது அக்டோபர் 7 ஆம் நாள் உயில் எழுதி தனது சொத்துக்களையும் நூல்களையும் இந்தியப் பெண்களுக்கு தேசியக் கல்வி வழங்க எழுதி வைத்து அதற்கு பேலூர் மடத்தைச் சார்ந்த மூத்த துறவிகளை அறங்காவலர்கள் ஆக்கிவிட்டு நோயின் கொடுமையில் வீழ்ந்தார்

அடுத்த 6 தினங்களில் நிலமை மோசமாகி இறுதிகாலத்தை எட்டினார், அவருக்கு பிடித்தமான பாடல் பாடபட்டது

” ’அஸதோ மா ஸதகமய தமஸோ ம ஜ்யோதிகமய ம்ருத்யோர் மா அம்ருதம் கமய’ எனும் ஸ்லோகம் அது

உண்மையற்றதிலிருந்து எங்களை உண்மைக்கு அழைத்துச் செல்வாயாக, இருளிலிருந்து எங்களை ஒளிக்கு அழைத்துச்செல்வாயாக மரணத்திலிருந்து எங்களை மரணமிலாப் பெருவழ்விற்கு அழைத்துச் செல்வாயாக என்பது பொருள்

அப்படியே அக்டோபர் 13ம் தேதி கண்களை மூடினார் நிவேதிதா

உண்மையில் அவர் ஒரு ஆச்சரியமான பிறப்பு, உண்மையான ஞான தேடலும் ஆத்ம தேடலும் தேடிய ஞான பிறப்பு

அதனை விவேகானந்தரிடம் கண்டு அவர் கைகாட்டிய இந்துமதத்தில் தன்னை கரைத்து இந்த இந்துநாட்டுக்காக வாழ்ந்தும் முடிந்தார்

அவள் ஏற்படுத்திய இந்து கல்வி, இந்து கலாச்சார புரட்சி மிக பெரிது, அதுதான் பின் இந்துமகாசபை, ஆர்.எஸ்.எஸ் என வளர்ந்தது

சொந்த நாடு, சொந்த மதம், சொந்த இனம் என எல்லாம் எதிர்த்து தான் கண்ட உண்மைக்காக , தான் கண்ட ஞானத்துக்காக, அது கொடுத்த மதத்துக்காக, அதை கொடுத்த குருநாதனுக்காக வாழ்ந்து முடித்தாள் அந்த உத்தமி

அவளுக்கு பின் கல்கத்தாவில் பெண் கல்வி பெருகிற்று, நாடெங்கும் அது பரவிற்று

பெண் கல்வியினை மிஷனரிகள் கொடுத்தார்கள், கிறிஸ்தவ மதம் கொடுத்தது என்பதல்லாம் அல்ல விஷயம், இங்கு பெண் கல்வியினை அவள்தான் தொடங்கி வைத்தாள்

அவளின் மங்கா புகழை மறக்கடிக்கவும், கல்கத்தாவில் அவள் பெயர் மங்கவும் இறக்கபட்ட பிம்பம்தான் தெரேசா

உண்மையில் அங்கு கொள்ளை நோயிலும், இன்னும் பல நெருக்கடியிலும் மடம் அமைத்து, ராம கிருஷ்ண சங்கம் அமைத்து உதவியவள் நிவேதிதா

பள்ளியும் கல்வியும் கொடுத்தவள் நிவேதிதா

அவள் புகழை மறைக்கவும் இந்து பெருமைகளை குலைக்கவும் மதமாற்றத்தை வளர்க்கவுமே 1931 தெரசே வரவழைக்கபட்டாள், நிவேதாவின் பெருமைக்கு விடபட்ட சவால் தெரேசா

அப்படியே நிவேதிதாவினை மறைத்து அவளை பிம்பமாகவும் மாற்றி புனிதராகவும் ஆக்கிவிட்டார்கள்

அந்த தெரசாவுக்கு பிரிட்டிஷ் அரசியும் போப்பும் இன்னும் கிறிஸ்தவ முதலைகளும் ஆதரவு தெரிவித்து வளர்த்த்து விஜயம் செய்து பாராட்டியதெல்லாம் நிவேதிதாவினை பழிவாங்கவே

உண்மையில் உண்மையான சேவையினை அங்கு செய்தது நிவேதிதாதான்

இன்று அவருக்கு பிறந்தநாள்

இன்று ஆர்.எஸ்.எஸ் பெண்கள் அமைப்பு முதல் பெண் கல்வி வரை பாரததத்தில் பெண்கள் அமைப்பும் பெண் நிலையும் உயர்ந்து நிற்க அவர்தான் காரணம்

அந்த மாதரசிக்கு தேசம் இன்று அவள் பிறந்தநாளில் பெரும் அஞ்சலி செலுத்துகின்றது

அவரின் சேவையும் கொடையும் அர்பணிப்பும் கொஞ்சமும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது, அவளை பாரதியாரின் வரிகளிலே வணங்கலாம்

“ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதொப்ப, எனக்கு பாரததேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி, ஸ்வதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குரு அவள்” என்றார் பாரதி

தன் மூன்று நூல்களை அவளுக்கு அர்பணிக்கும்பொழுதெல்லாம் இதையே சொன்னான் அந்த மகாகவி

தன் அர்பணிப்பான தேச சேவையால் என்றும் சுவாமி விவேகானந்தரை போல் இங்கு ஞானஜொதியாய் வாழும் அந்த கங்கைக்கு சுவாமியின் வரிகளாலே அஞ்சலி செலுத்தலாம்

“தாயின் இதயமும் தலைவனின் உள்ளமும்
ஆய தென்றலின் அற்புத இனிமையும்
ஆரிய பீடத் தழகொளி விரிக்கும்
சீரிய எழிலும் திகழும் வலிமையும்
கனவிலும் முன்னோர் கண்டிரா வகையில்
உனதென ஆகி ஓங்குக மென்மேல்!
எதிர்காலத்தில் இந்திய மகனின்
சீர்சால் தலைவியாச் செவிலியாய்த் தோழியாய்
நேரும் ஒருமையில் நீயே ஆகுக”

அந்த தியாக தீபத்தை நினைக்கும் பொழுதெல்லாம் அவள் புகழை மறைத்து அப்படியே சுவாமி விவேகானந்தரையும் மறைத்து அங்கு முன்நிறுத்தபட்ட வஞ்சக மதமாற்ற முகமான தெரசாவின் முகம் வராமல் போகாது

வெள்ளையனும் அதை தொடர்ந்த வெள்ளை ஆதரவு கம்யூனிஸ்டுகளாலும் நிவேதிதா புகழ் மேகத்தின் பின்னால் சூரியனாய் மறைக்கபட்டு தெரசா எனும் கிரகணம் முன்னிறுத்தபடலாம்

உரியகாலம் வரும்பொழுது நிவேதிதா சூரியனாய் தெரிவாள், அவள் பெருமையினை இத்தேசம் மாபெரும் எழுச்சியாய் சிலை வைத்து கொண்டாடும் இது சத்தியம்

என்றோ இத்தேசத்தில் மறுபடி மறுபடி பிறந்து இந்து ஞானத்திலும் இந்து வாழ்விலும் திளைத்திருந்த ஆன்மா , பின் இடம்மாறி பிறந்தாலும் தாயின் மடி தேடி வரும் கன்றுபோல் வந்து இப்பிறவியிலும் தன் இந்து திருதொண்டை செவ்வனே செய்தது என்பதுதான் அவள் வாழ்வின் தத்துவம்