கடவுள் இல்லை என்ற கோஷ்டி இரணியன் காலத்திலே இருந்திருக்கின்றது
இந்த மண்ணில் கடவுள் இல்லை என்ற கோஷ்டி இரணியன் காலத்திலே இருந்திருக்கின்றது, கடவுள் பக்தர்களும் அவர்களுக்கு எதிரான கோஷ்டிகளுக்குமான சண்டை தேவர் xஅசுரர் சண்டை என பன்னெடுங்காலத்துக்கு முன்பே இருந்திருக்கின்றது
பல நேங்களில் பகவானே அவதாரமாய் வந்து காத்தும் நின்றிருக்கின்றார்
தொன்றுதொட்டு வரும் சண்டை இப்பொழுதும் நடக்காவிட்டால் கடவுளின் இயக்கமே நின்றுவிட்டது என பொருள் அல்லவா?
அதனால் தான் தொடர்ந்து இயங்குவதை நிருபிக்க கடவுளும் அந்த சண்டை தொடர்வதை விரும்புகின்றார்
அந்த தேவர்x அசுரர் ,ஆத்திகர்x நாத்திகர் தகறாறு இப்பொழுது சங்கிx மங்கி என தொடர்ந்து நடக்கின்றது
ஆனால் ஒருநாளும் அசுர தரப்பு வெற்றி பெற்றதே இல்லை அது ஒருநாளும் நடக்காது என்பதுதான் வரலாறு,
ஆனால் தவறாமல் ஆட்டத்துக்கு வந்துவிடுவார்கள் இப்பொழுதும் வந்து ஆடிகொண்டே இருக்கின்றார்கள், வழக்கம் போல அடிபட்டு செல்வார்கள்
அதன் பின் திரும்பவும் ஏதாவது உருவில் அடிவாங்கவே வருவார்கள்
கடவுள் தொடர்ந்து தன் இயக்கத்தை காட்டிகொண்டே இருப்பார்.
தன்னை நம்பிய யாரையும் நாத்திகம் காத்ததுமில்லை, தன்னை நம்பிய விலங்கினை கூட தெய்வம் கைவிட்டதுமில்லை