கடுப்பேற்றுவதில் புட்டீனை மிஞ்ச முடியாது
பழைய விவகாரங்களை ஏன் அமெரிக்காவே மறந்துவிட்ட விவகாரங்களை கிளப்பி அவர்களை கடுப்பேற்றுவதில் புட்டீனை மிஞ்ச முடியாது
எங்காவது விட்டகுறை தொட்டகுறை இருந்தால் அதில் சென்று வம்பிழுப்பது இப்போது புட்டீனின் பொழுது போக்கு
அந்த வேலையினை இப்பொழுது ஜப்பான் தென்கொரிய பக்கம் செய்திருகின்றார்
அதாவது கொரிய போரில் அமெரிக்கா ரஷ்யா சீனா என பலர் உண்டு,போர் முடிந்து கொரியாவினை பிரிக்கும் பொழுது சில கடற்பரப்பு தகறாறு இருந்தது
அமெரிக்கா ஒரு எல்லையினை போட்டது, ரஷ்யாவும் சீனாவும் அதை ஏற்கவில்லை அப்படியே விஷயம் அமுங்கியும் போனது
வான்வெளி போட்டி ஆரம்பித்த நிலையில் அமெரிக்க சீன உறவு துளிர்விட்ட நிலையில் எல்லாம் மறக்கடிக்கபட்டது
சோவியத் உடைந்தபின் அப்படி ஒரு தகறாறு இருந்ததாகவே யாருக்கும் நினைவில்லை
அந்த சர்ச்சை மறைந்து அதிலிருக்கும் ஒரு தீவு தொடர்பாக ஜப்பானும் தென் கொரியாவும் அடிக்கடி மோதிகொள்ளும்
அது தென்கொரிய பக்கம் இருக்கும் தீவு என்றாலும் ஜப்பான் உரிமை கோரும்
அந்த தீவு தென் சீனகடலில் இருப்பதால் அது தனக்கு சொந்தம் என சீனாவும் சொல்லிகொள்ளும்
இப்படியான சிக்கல் உள்ள தீவில் ரஷ்ய விமானம் தீடீரென வந்து பறந்து சர்ச்சையினை ஏற்படுத்தியிருக்கின்றது
வந்த விமானங்கள் தீவு மேல் வட்டமடித்திருக்கின்றன, தென்கொரிய விமானங்கள் கிளம்பி போய் எச்சரித்திருக்கின்றன, மிரட்டியிருக்கின்றன
ரஷ்ய விமானங்கள் அசரவில்லை
அதன் பின் தென்கொரிய தரப்பு கெஞ்சியிருக்கின்றது, அழுதிருக்கின்றது
அதன் பின்பே ரஷ்ய விமானங்கள் சென்றிருக்கின்றன
ரஷ்யா இன்னும் பதிலளிக்கா நிலையில் அதன் செயல்பாடுகள் 1950களில் தீர்க்காமல் விட்ட சிக்கலை ரஷ்யா மறுபடி சீண்டி பார்ப்பதாகவே தெரிகின்றது
ரஷ்ய விமானம் தென் கொரிய பக்கம் வந்து மிரட்டிவிட்டு சென்றிருப்பதில் வடகொரிய வெள்ளை தக்காளி மிகுந்த சந்தோஷத்துடன் துள்ளி குதித்து கொண்டிருப்பார் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை
ஆம், ரஷ்ய விமானங்கள் வந்து தென்கொரியாவின் வான் பாதுகாப்பினை உளவுபார்த்துவிட்டு சென்றிருக்கலாம்
அதன் தரவுகள் வடகொரிய கைக்கு கிடைக்காமலா போய்விடும்?
