கடும் காய்ச்சலாம்
சும்மா ஜல்லிகட்டு காளை போல வந்த அறை நண்பன் இரு நாட்களாக வெட்ட கொண்டு போகும் மாடு போல சுருண்டு கிடக்கின்றான்
கடும் காய்ச்சலாம்
திமுகவினை விட்டுவிடுகின்றேன் என மாரியம்மா கோவிலில் சத்தியம் செய், உனக்கு விபூதி அடிக்கின்றேன் எல்லாம் சரியாகும் என சொன்னாலும் கேட்கவில்லை
சில நேரம் ஜூரத்தில் முணங்குகின்றான், “கலைஞரய்யா வாங்க அது யாரு அண்ணவா? திராவிட வணக்கம்” என அவன் சொல்லும் பொழுது பயமாகத்தான் இருக்கின்றது
ஏன் இப்படி ஆகிவிட்டான்
தமிழிசை கவர்ணராகும் விஷயம் அவனுக்கு எப்படியோ தெரிந்திருக்கின்றது போல, அந்த அதிர்ச்சியில் இப்படி ஆகிவிட்டான் பாவம்