கட்டியவன் யார்?
இவ்வளவு நடந்திருக்கின்றது, அந்த சுவருக்கு சொந்தக்காரன் யார்? கட்டியவன் யார்? அவன் மேல் நடவடிக்கை என்ன? என ஒரு செய்தியும் காணவில்லை. அரசு தரப்பிடம் பதிலே இல்லை
தமிழக ஊடக தர்மம் அப்படி இருக்கின்றது, தமிழக அரசுக்கும் கொங்கு பாசம் அதிகம்
முக ஸ்டாலின் ஓடி சென்று பார்த்திருக்கின்றார், அவரும் சுவருக்கு சொந்தக்காரன் யார் என கேட்கவே இல்லை, தானாக முளைத்த சுவர் என அவர் நம்பிகொள்வார் போல
இது பற்றி கேட்டால் “சுவர்தான் இடிந்துவிட்டதே இனி அதை எவன் கட்டியிருந்தால் என்ன?” என சொல்லிவிட்டு நகர்கின்றார்கள் ஊடகத்தார்