கண்டம் விட்டு கண்டம் பாயும் நீர்மூழ்கி ஏவுகனை
ரஷ்யா நேற்று அதிரடியான காரியத்தை செய்திருக்கின்றது, அதாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் நீர்மூழ்கி ஏவுகனையினை பரிசோதித்திருக்கின்றதுஇது கொஞ்சம் அல்ல நிறையவே ஆபத்தான ஆயுதம்பொதுவாக ஏவுகனை என்பது தரை, கப்பல் அல்லது விமானத்தில் இருந்து ஏவபடும். விமானத்தை நொறுக்கினால் அல்லது கப்பல் மற்றும் தரையில் அது ஏவபடும் இடத்தை நொறுக்கினால் முடிந்தது விஷயம்ஆனால் நீர்மூழ்கியில் இருந்து ஏவினால் கொஞ்சம் சிக்கல், கடல் அவ்வளவு பெரும் பாதுகாப்புசில நாடுகளிடம் நீர்மூழ்கியில் இருந்து ஏவபடும் டார்பிடோ ரக ஏவுகனைகள் உண்டு அவை குறுகிய தூரமே பாயும், உதாரணம் மும்பை அல்லது குஜராத்தில் இருந்து பாகிஸ்தானை தாக்கலாம்ஆனால் ரஷ்யா நேற்று செய்திருக்கும் சோதனை ரஷ்யாவின் கடலில் இருந்து உலகின் எந்த மூலையினையும் தாக்கலாம்அதாவது யுத்தம் வெடித்தால் ரஷ்ய நீர்மூழ்கிகள் உலகின் எந்த கடலில் இருந்தாலும் எந்த நாட்டையும் தாக்கலாம், இந்திய பெருங்கடலில் இருந்து பசிபிக், ஆர்டிக், அட்லாண்டிக் ஏன் கருங்கடலில் இருந்து கூட போட்டு அடிக்கலாம்கடலில் எந்த இடத்தில் இருந்து வரும் என தெரியாது, திடீரென எங்கிருந்தோ வந்து அடித்துவிடும்திடீரென பெரும் சுறா பாய்வது போல் பாய்ந்து சென்று எதிரி நாடுகளை சிதறடிக்கும் இந்த ஏவுகனைஇந்த பலுவா எனப்படும் ஏவுகனையினை அணுசக்தி நீர்மூழ்கியில் இருந்து சோதித்திருக்கின்றது ரஷ்யா, ஆம் அணுசக்தி நீர்மூழ்கி என்றால் தொடர்ந்து சில வருடங்கள் கூட கடலுக்கு மேலே எரிபொருளுக்காக வராமல் கடலடியிலே சுற்றமுடியும், கடலுக்குள் எல்லை இல்லை விசா இல்லை என்பதால் உலகமெல்லாம் கடலடியிலே ரவுண்டு வரலாம்தான் வல்லரசாக நீடிக்கவும், எச்சூழலிலும் அமெரிக்காவுக்கு சவால் கொடுக்கவும் அதிரடி காரியங்களில் இறங்கியிருக்கின்றது ரஷ்யாஅமெரிக்கா எப்பொழுதுமே வித்தியாசமான நாடு, அது சிறிய நாடுகள் என்றால் ராணுவத்தால் அடிக்கும் பெரும் நாடுகள் என்றால் வயிற்றில் அடிக்கும்ரஷ்யாவின் பலம் அதன் எண்ணெய், பெட்ரோலுக்கு எதிர்காலம் இல்லாமல் செய்துவிட்டால் ரஷ்ய கொட்டம் தானாய் அடங்கும் என திட்டமிடுகின்றது அமெரிக்காஎன்னதான் ராணுவ பலம் இருந்தாலும் அமெரிக்க பொருளாதாரம் முன்பு ரஷ்யாவால் நிற்க முடியாதுஇவர்கள் ஏவுகனைகளால் பேசிகொண்டிருக்க, ரஷ்யாவின் பொருளாதாரத்தை எப்படி அடிப்பது என யோசித்து கொண்டிருக்கின்றது வெள்ளை மாளிகை..
