கதறுங்கடா.. நன்றாக கதறுங்கள்
இந்திரா உலகினை ஆட்டிய காலங்களில் அமெரிக்க அதிபர் நிக்சன் அவரை “சூனியகார கிழவி” என சொன்னது பெரும் சர்ச்சையானது
அதாவது எப்பொழுதெல்லாம் இந்தியாவில் பலமான அரசு அமையுமோ அப்பொழுதெல்லாம் அமெரிக்கா முணுமுணுக்கும்
இந்திரா காலத்துக்கு பின் வாஜ்பாய் காலத்தில் புஷ் அப்படி வம்பிழுத்தார்
ஆனால் மன்மோகன் சிங் என்பவரை ஆசியாவின் மிக சிறந்த அறிவாளி என கொண்டாடும்
ஏன் என்றால் அப்படித்தான், அமெரிக்க அரசியல் அப்படி
இப்பொழுது மோடி அரசு சிறுபான்மையினருக்கு எதிரான அரசு என முணுமுணுப்பினை செய்கின்றது
அமெரிக்காவுக்குத்தான் இஸ்லாமியர் மேல் எவ்வளவு பாசம்?
அது ஆப்கானில் தெரிந்தது, பின்லேடன் தாக்குதல் நடத்தியபின் தெரிந்தது இன்னும் பல இடங்களில் தெரிந்தது
அட இஸ்ரேல் பாலஸ்தீனில் செய்யும் அட்டகாசம் பற்றி அமெரிக்கா மூச்சுகூட விடாத நிலைப்பாட்டில் நன்றாய் தெரிகின்றது
சரி மத ரீதியாக கூடவேண்டாம், இன ரீதியாக அமெரிக்காவில் கருப்பர்கள் நடத்தபடும் விதத்தில் தெரிகின்றது
வெள்ளை போலிசார் கருப்பர்களை சுட்டு கொல்வதும், அம்மக்கள் நீதிவேண்டி போராடுவதும் அமெரிக்காவில் வாடிக்கை
பாலஸ்தீனத்தில் ஒரு நீதி, ஈராக்கில் ஒரு நீதி, உள்நாட்டு கருப்பர்களுக்கு ஒரு நீதி என நிற்கும் அமெரிக்கா இந்தியாவின் விஷயத்தில் சிறுபான்மையினர் என தலையினை நீட்டுவதுதான் கொடுமை
இந்தியாவில் ஒரு இஸ்லாமியன் குடியரசு தலைவராக முடிந்தது, கிரிக்கெட் அணியின் கேப்டனாக முடியும்
ஏன் இங்கு நாட்டை நேசிப்பவர் எந்த இனமாயினும் மொழியாயினும் தேசம் கொண்டாடும்
அமெரிக்காவில் ஒரு இஸ்லாமியன் , கருப்பன் பெரும் உயரத்துக்கு வரமுடியுமா?
ஒபாமா கூட கலப்பு வழி, முழு கருப்பு வம்சமும் அல்ல முழு இஸ்லாமியனும் அல்ல
அமெரிக்காவில் இல்லா சமத்துவம் நீதியும் இங்கு வாழ்கின்றது
பொதுவாக உலக அரங்கில் ஒரு தியரி உண்டு
அமெரிக்கா யாரை கரித்துகொட்டுமோ அவர்கள் நல்ல தலைவர்கள், யார் ஆட்சியினை சாடுமோ அது நல்லாட்சி
ஆனால் அமெரிக்கா யாரை ஆதரிக்குமோ அவர்கள் ஆட்சி காட்டாட்சி அல்லது அமெரிக்க அடிமை ஆட்சி
கவனியுங்கள் சவுதியின் காட்டுமிராண்டிதனமான நடவடிக்கைகளை அமெரிக்கா கொஞ்சமும் நோக்காது
அங்கு மக்களாட்சி வேண்டும் என வாயே திறக்காது, பாகிஸ்தானின் சிறுபான்மை இந்து கிறிஸ்தவர் மேலான தாக்குதலை கண்டு கண்ணை மூடும்
இஸ்ரேல் செய்யும் காட்டுமிராண்டி கொடூரங்களை ஏறெடுத்தும் பார்க்காது
ஆனால் இந்தியா என்றால் இப்பொழுது ஒருமாதிரி அதற்கு சுடுகின்றது என்றால் என்ன அர்த்தம்?
இந்தியாவின் எழுச்சியும் அதன் உறுதியான தலமையும் அவர்களுக்கு எரிச்சலை கொடுக்கின்றது என்பதுதான் உண்மை
கதறுங்கடா.. நன்றாக கதறுங்கள்