கதை திருட்டு என்பது இங்கு புதிதா?
அட்லீ என்பவரை ஆளாளுக்கு கலாய்க்கின்றார்கள், அவர் கதை திருடி படம் எடுக்கின்றாராம்
கதை திருட்டு என்பது இங்கு புதிதா?
புராண கதைகளை அப்படியே மேடை நாடகமாக்கினார்கள், பின்பு கதைகளை படமாக்கினார்கள் அதில் உள்ளூர் கதை முதல் அரேபிய கதைவரை உண்டு
1980க்கு பின் அரைத்தமாவையே அரைத்தார்கள், பாசமலர் பல வழிகளில் எடுக்கபட்டு தங்கைகோர் கீதம், கிழக்கு சீமையிலே என பல வழிகளில் வந்தது
பாகபிரிவினை இந்த வானத்தை போல, ஆனந்தம் என வந்தது
சபாஷ் மீனா, பலே பாண்டியா படங்களின் அப்பட்டமான காப்பியே சுந்தர்.சியின் படங்கள்
இதில் மணிசார் வித்தியாசமானவர், நேராக புராணங்களில் இருந்தே உருவிடுவார், சத்யவான் சாவித்திரி கதையினை ரோஜாவாக்கினார், துரியன் கர்ணன் கதையினை தளபதி ஆக்கினார், ராவணன் கதையினை ராவணன் ஆக்கினார்
அக்னி நட்சத்த்ரம் கூட பீமனின் பிள்ளைகள் சாயலே
வர்தாபாய் கதையினை நாயகனாகவும், ஸ்பீல்பெர்க்ஸின் ஈடி கதையினை அஞ்சலியாகவும் மாற்றினார்.
அப்பக்கம் தில்லான மோகனம்பாள் கதையினை கரகாட்டகாரன் என மாற்றி பெரும் பெயர் பெற்றது கங்கை அமரன் கோஷ்டி
பாலசந்தர் படமான நிழல் நிஜமாகின்றது என்பதும் பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே கதையும் ஒன்றே
பழைய தியாகராஜ பாகவதர் கால படங்களின் பாடல்களை இளையராஜா இசைக்கு மாற்றினால் மோகன் படங்கள் ரெடி
கண்ணதாசனின் கறுப்புபணம் எனும் படமே ஷங்கரின் ஜென்டில்மேன், சிவாஜி என படுகாப்பியாக வந்தது
அன்னாரி “ஐ” படம் நள தமயந்தி கதையின் அப்பட்டமான காப்பி
முள்ளும் மலரும் கதையின் கிளைமேக்ஸ்தான் காதலுக்கு மரியாதை படத்தின் முழு கதை
டி.ராஜேந்தரின் ஒருதலை ராகம் வசந்த மாளிகை படத்து கதையின் தழுவல்..
ஆயிரத்தில் ஒருவன் படத்து காட்சிகள் சிலவற்றை கில்லி படத்தில் அப்படியே வைத்திருப்பார்கள், கழுத்தில் கத்திவைத்து கேட்காமல் உண்மை சொல்லமாட்டான் தரணி
இவை எல்லாம் வெறும் எடுத்துகாட்டுகளே, இன்னும் ஏராளமான திருட்டுக்கள் உண்டு
ஆக எல்லா பயலும் திருட்டுகதையில்தான் இங்கு படமெடுத்து சம்பாதிக்கின்றான், 1980களில் இருந்து அதுதான் நடந்து கொண்டிருக்கின்றது
இதில் அட்லீயினை மட்டும் குறிவைத்து ஏன் திட்டவேண்டும்?
நீ காப்பி அடி ராசா.. ஆனால் அதற்கு முன் எல்லா பயலையும் இப்படி இழுத்துவிட்டுவிட்டு காப்பி அடி, அப்பொழுதுதான் ஒரு பயலும் உன்னை நோக்கி கைகாட்ட முடியாது
அப்படியே சின்னதம்பி, வருஷம் 16 படத்தை உன் பாணியில் எடு ஆனால் கதாநாயகியாக தலைவி குஷ்புவினை மட்டும் அப்படியே வைத்துவிடு
கதையினை மாற்றமுடியாது எனும்பொழுது கதாநாயகியினை மட்டும் ஏன் மாற்றவேண்டும், அதுவும் மாற்றி தீர தலைவியிடம் என்ன மாற்றம் வந்துவிட்டது?
அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்..