கனடா பிரதமரை கட்டி தழுவி சந்தித்தார் மோடி : செய்தி

Image may contain: 2 people, people standing

கனடா பிரதமரின் மனைவி இந்திய பாரம்பரியத்தில் அழகாக வணக்கம் சொல்கின்றார், நமது பாரம்பரியம் காக்க வந்த காவலரோ கையை நீட்டுகின்றார்.

இனி இந்திய பாரமபரியத்தை வெளிநாட்டவர்தான் காக்க வேண்டும் போலிருக்கின்றது.

உலகத்தை கலக்கிகொண்டிருக்கின்றது இப்படம், மோடி பக்தர்கள் ஹிஹிஹிஹி என அசடுவழிகின்றனர், பலர் கண்களை மூடிகொள்கின்றனர்

அந்த சோபி ஜஸ்டினுக்கு வாழ்த்துக்கள், சமீபத்தில்தான் தன் குழந்தைகளை இந்திய கலாச்சாரபடி வளர்ப்பேன் என சொல்லியிருந்தார்

(எங்கள் தலைவருக்கு கொஞ்சம் இந்திய பாரம்பரியம் சொல்லிட்டு போ தாயீ, நல்லா இருப்ப. எங்க ஆளு வெள்ளக்காரங்க சொன்னாதான் கேட்பார்..)

 

Image may contain: one or more people

 

கனடா பிரதமரை கட்டி தழுவி சந்தித்தார் மோடி : செய்தி

“இருக்குற பிரச்சினையில உன்ன கண்டுக்கலன்னு வேற கிளம்பிட்டானுக. எத்தனை மாநாட்டில உன்ன பாத்திருக்கேன், நல்ல பையன்யா நீ

எனக்கே ஆயிரம் பிரச்சினை ரபேல் முதல் பழனிச்சாமி பன்னீர் வரை எல்லாமே சிக்கல்

இதுல சிலர் வங்கில ஏமாத்திட்டு என் தலைய உருட்டுரானுக, அதுனால உன்ன பாக்க லேட் ஆயிட்டு,

வாய்ய வாய்யா

போயிட்டு எனக்கொரு அழைப்பு விடுத்துருய்யா, ரெஸ்ட் வேணும் , இவனுககிட்ட முடியல‌”


 Image may contain: 6 people, people smiling, people standing

“அப்புறம் கனடா ஜஸ்டின், இபபடியே கிளம்பிருங்க, தமிழ்நாட்டு பக்கம் போகாதீங்க , வெள்ளைககாரன் கட்டிய ஜார்ஜ் கோட்டை போற திட்டமெல்லாம் இருந்தா விட்ருங்க‌

போயிட்டா எங்க அம்மாவுக்கு கனடா விருது கொடு, நயாகாரா பக்கம் சிலை வை அப்படின்னும் ஒரு கூட்டம் டார்ச்சர் பண்ணும் ஜாக்கிரதை

திடீர்னு கனடா பிரதமர் எங்கள் ஆட்சியினை பாராட்டினார்னு அவனுகளே அறிக்கை எல்லாம் விடுவானுக, உனக்கு தமிழ்வேற தெரியாது. அந்த பக்கம் போகாத தம்பி, இப்டிக்கா ஓடிரு”