கனிமொழி vs தமிழிசை

கனிமொழி Vs தமிழிசை : களைகட்டும் தூத்துக்குடி

நாடார் வோட்டுகளுக்கு நம்பகமான தொகுதிகளில் கன்னியாகுமரியும் தூத்துகுடியும் முக்கியமானவை

நெல்லை தொகுதி வேறுமாதிரி நாடார் வோட்டு உண்டெனினும் நம்பகமில்லா தொகுதி அது.

அதில் கன்னியாகுமரியில் அசைக்கமுடியா கோட்டை கட்டியிருக்கின்றார் பொன்னார், என்னதான் கிண்டல் செய்தாலும் அந்த கோட்டைக்கு அவர்தான் ராஜா

மீதமிருப்பது தூத்துகுடி

இங்குதான் கனிமொழி குறிவைத்தார், திமுகவிற்கு பெரும் பலமான தொகுதி அது. கீதா ஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், ராதிகா செல்வி என பல திமுக பிரபல்ங்கள் அங்கு உண்டு

நாடார் வாக்குகளை குறிவைத்தே கனிமொழி இறங்குவது ரகசியமல்ல‌

தமிழிசைக்கு தூத்துகுடி துப்பாக்கிசூடு பெரும் தடை, அம்மணி அப்பொழுது பேசிய பேச்சுக்களை புள்ளி கமா விடாமல் குறித்து வைத்திருக்கின்றது திமுக தரப்பு

கனிமொழி இப்பொழுதே வெற்றிபெற்றதாக அறிவித்துவிடலாம்

சந்தடிசாக்கில் நாடார் வோட்டுக்காக ராதிகாவினை நிறுத்தலாம் சரத்குமார் என்கின்றார்கள்

நாயுடுவான ராதிகா நாடாராக மாறிவிட்டாராம்

ஒரு ஒற்றுமை தெரிகின்றதா?

கனிமொழி, தமிழிசை, கீதா ஜீவன், ராதிகா செல்வி, ராதிகா சரத்குமார் என ஒரே பெண்கள் வரிசையாக இருக்கின்றது

இந்த சசிகலா புஷ்பா என்பவரும் தூத்துகுடிக்காரர்

ஆக பெண்கள் புரட்சி பாரதி பிறந்த எட்டயபுரம் உள்ள தூத்துகுடி தொகுதியிலிருந்து கிளம்புகின்றதோ என்னமோ?