கன்னட நிலமை போல ஆகிகிடக்கின்றது இஸ்ரேலிய பாராளுமன்றம்

கன்னட நிலமை போல ஆகிகிடக்கின்றது இஸ்ரேலிய பாராளுமன்றம்

செப்டம்பர் மாதம் மறுபடியும் தேர்தல் என அறிவித்துவிட்டார்கள், அந்த நேதன்யாகு கடும் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றார்

அதில் டிரம்ப், புட்டீன் மற்றும் மோடியுடன் அவர் இருக்கும் பேனர்கள் இஸ்ரேலில் களைகட்டுகின்றன‌

இது மோடிக்கான வெற்றி என இங்கிருப்பவர்கள் சொல்லலாம் சொல்லட்டும்

ஆனால் நுட்பமான விஷயம் என்ன தெரியுமா?

நீவீர் எம்மை பின் தொடர்பவர்கள் என்றால் டிரம்ப், மோடி, புட்டீன் என இந்த மூவரையும் ஏன் இஸ்ரேல் பெரிதாக்குகின்றது என்பது நொடியில் புரிந்திருக்கும்…

அதாவது இவர்களை எல்லாம் இஸ்ரேலோடு நெருங்க செய்தவர் நேதன்யாகு என ஏன் இஸ்ரேலியர் மனதில் ஒரு மாயையினை உருவாக்குகின்றார்கள்

இந்த மூவருமே இஸ்லாமியருக்கு ஆதரவானவர்கள் அல்ல‌

டிரம்ப் செய்யும் அழிச்சாட்டியம் உலகறிந்தது

புட்டீன் செச்சன்ய இஸ்லாமியர் மேல் காட்டும் இறுக்கம் ஒருமாதிரியானது, ரஷ்ய எல்லையிலும் காஷ்மீர் சாயல் உண்டு

மோடிபற்றி கேட்கவே வேண்டாம்

ஆக இவர்கள் மூவரும் இஸ்லாமியரை ஒருமாதிரி பார்ப்பவர்கள், பாலஸ்தீனத்தின் சுதந்திரத்தை ஆதரிக்கமாட்டார்கள்

உலகின் தலைவர்களை பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைத்தவர் பெஞ்சமின் நேதன்யாகு எனும் வன்மமும் உண்மையும் அங்கு தேர்தல் பொருளாகின்றது

மூன்று நாடுகளையும் பாலஸ்தீனத்தில் தலையிடாமல் தடுத்து ஜெருசலமை இஸ்ரேலில் தலைநகராக அறிவிக்க வழிசெய்தவர் நேதன்யாகு என்றேல்லாம் சொல்லாமல் சொல்கின்றார்கள்

புரிந்தவர் புரிந்துகொள்ளட்டும், புரிந்து கொள்ளாதோர் பின்னொரு நாளில் புரிந்துகொள்வர்