கமலஹாசனுக்கும் பூஜாகுமாருக்கும் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுவிட்டதாக செய்தி
கமலஹாசனுக்கும் பூஜாகுமாருக்கும் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுவிட்டதாக செய்திவரும் நிலை , கமலஹாசனிடம் முதல்மரியாதை சிவாஜிகணேசனிடம் கேட்கபடுவது போல “உங்க மேல ஒரு பிராதுங்க, அந்த புள்ளைக்கும் உங்களுக்கும் தொடுப்பு இருக்குண்ணு..” என ஜனகராஜ் ஸ்டைலில் ஆர்வமுடன் கேட்டுகொண்டிருக்கும் நேரமிது
இந்நேரம் பார்த்து அம்மணி தானும் ரஜினியும் கமலும் இருக்கும் படத்தை பதிவேற்றி “நான் மிக மிக அதிர்ஷ்டசாலி” என சொல்லிவிட்டது
இதை பார்த்து சிலர் அதே ஜனஜராஜ் ஸ்டைலில் கள்ள சிரிப்பும், சிலர் கவுண்டமணி பாணியில் கையினை தட்டியபடி “இதெல்லவோ பதிவு” என சிரித்துகொண்டிருக்கின்றார்கள்
சிலர் செந்தில் போல “அண்ணே இந்தம்மா என்னண்ணே சொல்ல வருது ஒரே குழப்பமா இருக்குண்ணே” என தவித்துகொண்டிருக்கின்றார்கள்
சிலரோ வடிவேலு ஸ்டைலில் “ஆத்தாடி, இந்தம்மா ரஜினிகாந்தையே கோர்த்துவிடுது பாரு” என பார்த்துகொண்டிருகின்றனர்
விஷயம் ரஜினிக்கு தெரியாது போல இனி தெரியும் பட்சத்தில் கமலஹாசனை கண்டாலே தலைதெறிக்க இமயமலைக்கு ஓடிவிடுவார்..
