கமலஹாசனுக்கு அடுத்த தலைமுறை ரசிகை

Image may contain: 1 personபரதநாட்டியம் படிக்கும் மகளுக்கு திடீர் சந்தேகம் வந்தது, ” பாய்ஸ் எல்லாம் பரதநாட்டியம் ஏன் ஆடலப்பா?” என கேட்டுவிட்டாள்

“யாரும் ஆடலாம்மா..” என்றேன், “எங்க கிளாஸ்ல எல்லோரும் கேர்ஸ்பா எங்க டீச்சர் கூட கேள்லப்பா, பாய்ஸ் ஆடி நான் பாத்த்தில்லபா..”

“ஒருவர் ஆடியிருக்கிறார் பாக்குறியாம்மா என்றேன், சரிப்பா” என்றாள்

கமலஹாசனின் சலங்கை ஒலி பாடலை காட்டியாயிற்று

“அப்பா இது பிக்பாஸ் அங்கிள், ஆனா சூப்பரா ஆடுராங்கப்பா, இப்போ ஏம்பா ஆடுறதில்ல‌

இப்ப கூட விஸ்வரூபம் படத்துல ஆடினாரும்மா

வேற ஏம்பா இப்படி பிக்பாஸ்ல வந்து பேசிட்டிருக்காரு, எவ்வளவு அழகா ஆடுறார். அங்க யாருமே இப்படி ஆடலப்பா சும்மா குதிச்சாங்க‌

அவருக்கு டான்ஸ் ஒரு பக்கம் தான், இன்னும் நிறைய விஷயம் இருக்கும்மா

ம்ம்ம் சூப்பர்ப்பா…. இனி அவர் படம் அடிக்கடி பாப்போம்பா”

நல்ல கலைஞனை எல்லா தலைமுறையும் ரசிக்கும், அவன் தலைமுறையினை தாண்டி நிற்பான் , கமல் அதற்கு உதாரணம்

கமலஹாசனுக்கு அடுத்த ரசிக தலைமுறையும் உருவாகிகொண்டிருக்கின்றது.

(வருஷம் 16 குஷ்பூ பரதநாட்டியத்தை காட்டினாலும் மகள் ரசனை கமல் மீதே இருந்தது, பாவம் சிறுபிள்ளை என்பது சரியாகத்தான் இருக்கின்றது )