“கமலுக்கு என்ன …..” : ரஜினி மைண்ட் வாய்ஸ்
அந்த ஆளுக்கென்ன? பொண்டாட்டி கடைக்கு வாடகை பாக்கியா? இல்ல பொண்ணு வாங்கியிருக்க கடனா? இல்ல படம் ஏதும் ரீலீஸ் ஆக போகுதா
ஒண்ணுமில்ல
நமக்கு ஏக சிக்கல், இன்னும் 2 படம் வேற வரணும். நாம கட்சி தொடக்கம்னு ஏதும் சொல்லி வம்பு வந்துட்டா 2 படமும் காலி, அப்போவே பாபா பெட்டி தூக்கிட்டு ஓடுன ராமதாஸ் இனி சீமானை கூட்டிட்டே வருவார்
அந்த 2 படமும் ரிலீஸ் ஆகி கல்லா கட்டுற வரைக்கும் இப்படி கண்ண திறந்துவச்சிட்டே தியானத்துல இறங்கிற வேண்டியதான்
அம்மா ஜெயலலிதா ஏன் இப்படி திடீர்னு போயிட்டாங்க கலைஞர் அய்யா இன்னும் 10 வருடம் ஆக்டிவா இருக்க கூடாதா?
இவங்க இருக்கவரைக்கும் எவ்வளவு நிம்மதி, அவங்க இல்லாத நிலமையில நான் என்ன பாடெல்லாம் படவேண்டி இருக்கு
என்ன இப்படி ஆக்கிவச்சிட்டு 2 பேரும் போயிட்டாங்க..
அடுத்த ஜென்மத்துல தமிழ்நாட்டுக்கு மட்டும் நடிக்கவே வரகூடாது ஆண்டவா”