கமல், ரஜினி எல்லாம் ஏன் அரசியலுக்கு வாராங்க?

Image may contain: 1 person, close-upஅண்ணே, ஏண்ணே திடீர்னு இந்த கமல், ரஜினி எல்லாம் அரசியலுக்கு வாராங்க?

அடேய் கோமுட்டி தலையா, இந்த குஷ்பு புள்ள இருக்குல்ல அது அடுத்த காங்கிரஸ் அரசுல அமைச்சராக போகுது. அதுக்குள்ள இவனுக ஒரு எம்.எல்.ஏ ஆகணும்னு குதிக்கின்றானுக‌

அப்படியாண்ணே , அவங்க அமைச்சர் ஆயிருவாங்களாண்ணே?

அதோட அறிவென்ன? தகுதியென்ன அது ஐ.நாவுல கூட பேசும்டா. இப்போ இருக்குற அமைச்சர்களை விட அது சூப்பர் அமைச்சரா நிச்சயம் இருக்கும்டா
Image may contain: 1 person, standingஇப்போதைக்கு டிரம்ப் கூட இங்கிலீஷ்ல பேசுற அளவுக்கு தகுதி உள்ள ஒரே அரசியல்வாதி தமிழ்நாட்ல குஷ்பு தாண்டா, இவனுகள 4 வார்த்தை பேச சொல்லு பார்ப்போம் , டிரம்ப் வடகொடியாவுக்கே ஓடி போயிருவார்

அண்ணே பார்த்து பேசுங்க, நாளைக்கே குஷ்பு இவங்க கட்சியில சேர்ந்தா என்னண்ணே பண்ணுவீங்க?

அடேய் அவங்க ஐ.எஸ் இயக்கத்துல சேர்ந்தாலும் அதை ஆதரிக்க அவங்க ரசிகர் உண்டுடா, ஆனா ஐ.எஸ் அல் கைதா எல்லாம் விட இவனுக ஆபத்தானவனுங்கண்ணு அந்த புள்ளைக்கு தெரியும்டா, அதனால இங்கெல்லாம் வராதுடா”