கம்யூனிசம் புகுந்த எந்த இடமும் உருப்படாது

கம்யூனிசம் புகுந்த எந்த இடமும் உருப்படாது, அங்கு குழப்பமும் கலவரமும் மட்டுமே மிஞ்சும்

அது ஆலையாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் சரி.

தலமையினை வீழ்த்து குழப்பத்தை ஏற்படுத்து என்பதுதான் கம்யூனிச சித்தாந்தம், அதற்கு குழப்பம் ஏற்படுத்த தெரியுமே அன்றி தீர்வு சொல்ல தெரியாது

அரசை எதிர்த்துகொண்டு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவது அன்றி ஒரு மண்ணும் கம்யூனிசம் செய்யாது, அது அந்த ஒன்றுக்காகவே உருவாக்கபட்டது

உலகில் கம்யூனிசம் புகுந்த எந்த நாடும் உருப்படாது, சீனாவில் இருப்பது கம்யூனிசம் என்றால் அவர்களே சிரிப்பார்கள்

கம்யூனிசத்தை கையில் எடுத்த ரஷ்யா அதை தலைமொழுகி கடலிலே எறிந்துவிட்டது

கம்யூனிசம் நுழைந்தால் நாடு நாசமாகும் என அன்றே சொன்ன ஐரோப்பாவும் மேற்குலகமும் இன்றுவரை கம்யூனிசம் நுழையாமல் காவலிருக்கின்றன, காரணம் நுழையவிட்டால் அவ்வளவுதான்

கேரளமும் மேற்குவங்கமும் இங்கு கம்யூனிஸ்டுகளால் உருப்படாமலே போனது

அந்த நாசமாய் போன சிகப்பு பிசாசு கம்யூனிசம் டெல்லி பல்கலைகழகத்தில் நுழைந்தால் என்னாகும்?

பல்கலைகழகம் நாசமாகத்தான் போகும், அதுதான் நடந்துகொண்டிருக்கின்றது