கரகாட்டக்காரன் 2?
கரகாட்டக்காரன் 2 படத்தில் நடிக்கப்போவது யார்? படக்குழு ஆலோசனை
கரகாட்டகாரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போகின்றாராம் அமரன்
இது நிச்சயம் சரிவராது, அந்த படத்தை அப்படியே விடுவதுதான் கங்கை அமரனுக்கு நல்லது
கரகாட்டகாரன் வெற்றிக்கு முக்கியமான காரணம் இளையராஜா, கவுண்டமணி மற்றும் செந்தில்
மகா முக்கிய காரணம் இளையராஜா, மற்றும் படம் வந்த காலசூழல்
அக்காலகட்டம் இளையராஜாவும் கங்கை அமரனும் தொட்டதெல்லாம் துலங்கிய காலம்
ஒருவகையில் அது தில்லானா மோகனம்பாள் படத்தின் அப்பட்டமான காப்பி என்றாலும், பாலையா கோஷ்டி வேடத்தில் கவுண்டரும் செந்திலும் படத்தை தாங்கினர்
அந்த மூவரின் இடத்தை நிரப்ப எந்த கொம்பனாலும் முடியாது, இருக்கும் பெயரை கெடுத்துகொண்டு பாரதிராஜா போல விடைபெற கங்கை அமரன் விரும்பினால் முயற்சிக்கட்டும்