கராத்தே செல்வினின் மனைவி
கராத்தே செல்வினின் மனைவி திமுகவுக்கு ஆதரவளித்துவிட்டாராம், அதற்கு அம்மணி சொல்லும் விஷயம்தான் கவனிக்கதக்கது
அதாவது திமுக கிறிஸ்தவர்களுக்கு காவலாம், போதாதா? இதோ இந்துக்களின் காவலன் என பாஜகவினை அதிமுக காட்டாதா?
கராத்தே செல்வின் தென்னகத்தில் 1990களில் பிரபல நாடார் தாதா, இந்த வெங்கடேஷ பண்ணையார், ராக்கெட் ராஜா எல்லாம் அவரிடம் நிற்கமுடியாது
பல கொலை தீரா புகழ் என சுற்றிவந்தார், ஜாண் பாண்டியனும் பசுபதிபாண்டியனும் அவர் இருந்தபொழுது பெரும் பிம்பமில்லை
ஒரு கட்சி கூட நடத்தினார் செல்வின்
அடுத்த எம்பி ஆகும் நிலையில் அவர் இருந்தார், அவ்வளவு பெரும் செல்வாக்கு அவருக்கு கூடியிருந்தது, சுய சாதி கிறிஸ்தவ நாடார்களை தாண்டி இந்துநாடார் வரை அவருக்கு செல்வாக்கு இருந்தது
சில வழக்குகளில் விடுதலையாகி சில வழக்குகளை எதிர்கொள்ளும்பொழுது பாளை சிறைவாசலில் கொல்லபட்டார்
25 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை நாடார்களின் பெரும் பிம்பமாக கருதபட்ட அந்த செல்வினின் மனைவியினை களமிறக்கியிருக்கின்றது திமுக தரப்பு
முன்பு வெங்கடேஷ பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வியினை இழுத்து வந்தது போல திமுக இவரை இழுத்து வந்திருகின்றது
ஆனால் இது எவ்வளவு தூரம் பலனளிக்கும் என தெரியாது, காரணம் செல்வின் கொல்லபடும் பொழுது திமுகதான் ஆட்சியில் இருந்தது
எனினும் ஒரு விஷயம் உண்மை
பொதுவாக திமுக மேடைகளில் “பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே” என அந்த பிராண்ட் பாடலை நாகூர் அனிபா குரலில் பாடவிடுவார்கள்
இனி செல்வினுக்கும் அப்பாடல் பொருந்தும், ஆம் செல்வினும் அச்சிறையில் பல்லாண்டு இருந்தார்
ஆக இனி திமுக மேடையில் அப்பாடல் ஒலித்தால் அது கலைஞருடன் செல்வினுக்கும் சேர்த்து என நாடார்கள் ஆனந்த கண்ணீர் விடுவார்கள்..