கரிபூசும் வேலையினை ஆனந்தவிகடன் செய்கிறது…

கலைஞரை பற்றி எழுதுகின்றோம் என சொல்லி, அவரை பற்றி தவிர்க்கமுடியாத சாதனைகளை சொல்லிவிட்டு, வஞ்சகமாக கரிபூசும் வேலையினை ஆனந்தவிகடன் செய்துள்ளது

கலைஞர் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர் அல்ல என்று தொடங்கி ஈழபோரில் அவர் அமைதிகாத்தார் என்று கொண்டு முடித்திருக்கின்றார்கள்

பெரும் வரலாற்று திரிபுனையும் செய்திருக்கின்றார்கள் அதாவது பிரமாணர்களின் காங்கிரசை எதிர்த்த கலைஞர் எப்படி காங்கிரசோடு கூட்டு வைத்தார் என கேட்கின்றார்களாம்

பிராமணரான‌ ராஜாஜிதான் காமரஜரை வீழ்த்த கலைஞரோடு முதலில் கூட்டு சேர்ந்தார் என்பதை மறைக்கின்றது விகடன், பார்ப்பண பாசமாக இருக்கலாம்

திமுக பிளக்கபட்டு அதிமுக எனும் கட்சி டெல்லியின் தயவில் ஆளவந்த காலத்தில் தன் கோடாரி காம்பினை அதன் எஜமான் மூலம் வெட்ட முயன்ற தந்திரத்தை சொல்ல விரும்பவில்லை விகடன்

அதாவது அரசியல் அறத்திற்கு அப்பாற்பட்டது, ஜெஜ்ரிவால் கூட காங்கிரசோடு அனுசரித்து போன காலங்கள் உண்டு. அரசியல் அப்படித்தான்

இதனை எல்லாம் விகடன் சொல்லாமல், பாஜகவினை அழைத்து வந்து தமிழகத்தில் காலூன்ற வைத்தது கலைஞர் என கூசாமல் சொல்கின்றது

பாஜக, காங்கிரஸ் என எல்லாவற்றின் முதல் சாய்ஸ் அதிமுகதான் வாஜ்பாயும், சோனியாவும் ஜெயாவிடம் பட்ட அவமானங்களே அவர்களை கலைஞரை நோக்கி தள்ளின, கிடைத்த வாய்ப்பினை கலைஞர் பயன்படுத்தினார், அதில் தேர்தல் தவிர்ப்பு அவசியமும் இருந்தது

முன்பு விபிசிங், 3ம் அணி என்றுதான் கலைஞரின் தேர்வு இருந்தது, ஜெயாவிடம் பட்ட அவமானத்தில் கலைஞரை தேடி தேசிய கட்சிகள் வந்தன, ஜெயா நம்பதகதவர், கலைஞர் நம்ப கூடியவர் என அவைகளே சொன்னது

இதனையும் ஆனந்த விகடன் சொல்லவில்லை

2009 ஈழப்போர் புலிகளின் பிடிவாதத்தில் நடந்தது, முடிந்த அளவு கலைஞரும் சிலநடவடிக்கைகளை எடுத்தார், ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு வேறுமாதிரி இருந்தது

இந்தியா ராஜிவ்கொலை எனும் புள்ளியினை தாண்டி இறங்கவேண்டுமென்றால், புலிகளும் சில தியாகங்களை செய்யவேண்டும் என்றபொழுது புலிகள் இறங்கவில்லை, வைகோ முதலனோர் அவர்களை இறங்கவிடவே இல்லை

இன்னொன்று சர்வதேசம் இலங்கையில் போரினை நடத்தியபொழுது, இந்தியா நுழைய சரியான வாய்ப்புமில்லை

“என்னை பற்றி ஈழ அரசியல்வாதிகள் என்ன நினைக்கின்றார்களோ தெரியாது, ஈழபிரச்சினையில் இந்நாடு ஒரு தலைவனை இழந்திருக்கின்றது, பாதிக்கபட்ட குடும்பம் அரசாட்சியில் இருக்கின்றது, சாதரண மாநில முதல்வரான நான் என்ன செய்யமுடியும்” என அவர் கேட்டது எல்லார் காதிலும் விழுந்தது

அதே நேரம் கலைஞர் காங்கிரஸ் அரசின் ஆதரவினை விலக்கினால், காங்கிரசை ஆதரிக்க தயார் என ஜெயலலிதா சொன்னதையும் விகடன் மறைத்துவிட்டது

இப்படி கலைஞரை பற்றி சொல்லியே ஆகவேண்டிய பக்கங்களை சொல்லிவிட்டு, அவர் மீது எதிலெல்லாம் குற்றம் சாட்டமுடியுமோ அதிலெல்லாம் மிக தெளிவாக கருப்பு தார் பூசுகின்றது விகடன்

ஒரு பார்பன சாயல்மிக்க, புலிகள் ஆதரவான அந்த பத்திரிகையிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?

இப்படித்தான் வரும், இப்படி வன்மத்தோடுதான் வரும்.

அவ்வளவு ஆத்திரம் அந்த மனிதர் மேல், காலம் கடந்தாலும் அவரை விடுவதாக இல்லை போலும்..

எழுதிய அந்த நபர் யாரென தெரியவில்லை, ஆனால் இப்படி மேலோட்டமாக எழுதினால் எல்லோரும் நம்பிவிடுவார்கள் என நினைத்திருக்கின்றார் போலிருக்கின்றது

எழுதியவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கின்றது, கலைஞர் எழுத்தில் பேனா பாகுபலி, அவரின் எழுத்து எத்தனைகோடி பேரினைசென்றிருக்கும் என தெரியாது போல‌

இவரை போன்றவர்கள் எழுத எழுத நம்மை போன்றவர்கள் பதில் சொல்லிகொண்டே இருக்கலாம்..