கருணாநிதியின் பெரும்பான்மை திட்டம் தோல்வி
கருணாநிதியின் பெரும்பான்மை திட்டம் தோல்வி, பிச்சைக்கார ஒழிப்பு என தொடங்கி ஏகபட்ட தோல்விகள் உண்டுசமத்துவபுரம் எல்லாம் கட்சிக்காரன் கான்ட்ராக்ட் எடுத்து சம்பாதிக்க உருவாக்கபட்ட திட்டம், அதனால் என்ன சாதி ஒழிந்தது? இன்று சமத்துவபுரம் எப்படி இருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரியும், அதனால் என்ன நடந்தது என்றால் ஒன்றுமே இல்லைசரி சமத்துவபுரத்தில் கலைஞர் குடும்பம், திருமா குடும்பம், ராமதாஸ் குடும்பம், குமரி அனந்தன் குடும்பம், சேதுராமன் குடும்பம், எஸ்வி சேகர் குடும்பம் என வசித்தாலாவது சரி , நல்ல முன்மாதிரியாக அமையும்அதெல்லாம் சாத்தியமா? இல்லை.அப்படித்தான் அவரின் சமத்துவபுரமும். அவராக கனவு கண்டு அரசு பணத்தை வீணடிப்பது.அப்படிபட்ட படுதோல்வியில் ஒன்று உழவர் சந்தைவிவசாயிக்கு விவசாயமே தொழில், அவனால் அனுதினமும் கடைவிரித்து அமரமுடியாது. விவசாயி என்பவன் 2 ஏக்கரில் கத்தரி பயிரிட்டாலே ஏகபட்டது விளையும், அதை அவன் உழவர் சந்தை என அமர்ந்து விற்க முடியாது, பல நூறு கிலோ தக்காளி எங்கு விற்கபடும்பருத்தி, மிளகாய்வற்றல் வகை என்ன?மொட்டைமாடி காய்கறி தோட்டத்துக்கே உழவர் சந்தை சரிஒரு ஏக்கரில் விவசாயி வாழை பயிரிடுகின்றான் சுமார் 800 வாழைதார்கள் விளையும், இவற்றை உழவர் சந்தையில் அவனால் விற்கமுடியுமா?உண்மையில் விவசாயி சுரண்டபடுவது சந்தையிலே அல்லது வியாபாரிகளிடமேசந்தையில் மொத்த வியாபாரிகள் கமிஷன் என்றொரு பெரும் தொகையினை சுருட்டி கொண்டு விவசாயிக்கு மிச்சத்தை கொடுப்பார்கள், இந்த இடை வியாபாரிகளுக்கு இரு பக்கமும் லாபம்விவசாயிக்கு விளைபொருள் போக்குவரத்து வாடகை, கமிஷன் போக மிஞ்சுவது அவனின் வழி செலவுக்கும் டீ குடிக்கவுமே சரிஇதனால்தான் உழவர் சந்தை வரும்பொழுது சொன்னார்கள் “இதெல்லாம் விவசாயிக்கு சாத்தியமில்லை, பெரும் மொத்த வணிகர் உலவும் சந்தையில் இடைதரகர்களை கட்டுபடுத்துங்கள், முறைபடுத்துங்கள். அது அரசுக்கும் வருமானம் விவசாயிக்கும் லாபம்”வியாபாரிகளை பகைப்பவரா கருணாநிதி? பகைத்தால் நன்கொடை வருமா? கட்சி நிதி வருமா?அவர் அவர் போக்கில் “உழவர் கடை திறந்தார், கழகம் மடை திறந்தது” என என்னவோ வசனம் எழுதி காட்சிகளை நடத்திகொண்டிருந்தார்உழவன் உழுவானா பயிரிடுவானா? வயலை பார்ப்பானா? இல்லை சந்தையில் அமர்ந்து விற்பானா? மொத்த பொருளை எங்கே விற்பான் என்பதற்கெல்லாம் பதிலே இல்லைஅதுவும் கோஸ், கேரட், காலிபிளவர் வகையறா எல்லாம் எல்லா இடத்திலும் விளையாது, இதெல்லாம் வியாபாரிகளை ஊடுருவ செய்யும்வெங்காயமும் பூண்டும் தமிழகத்தில் அதிகம் விளையுமா? உருளைகிழங்கு உண்டா? இதெல்லாம் செய்யும் வியாபாரி முன் விவசாயி நிற்கமுடியுமா? என்பதற்கெல்லாம் பதிலே இல்லைஅதற்குமேல் கேட்டால் ஒரு சூத்திரன் நல்ல திட்டம் கொண்டுவந்தால் பார்ப்பானிய அடிமைகளுக்கு பொறுப்பதில்லை என பதில் வந்திருக்கும்அவர் கட்டிய அணையும் சரி, பல திட்டமும் சரி , எல்லாமே மேம்போக்கானவை ஆழ பொருளும் பலனும் தருவது எதுவுமில்லை
