கருணாநிதி தமிழரா இல்லையா
கருணாநிதி தெலுங்கர், அவரின் பூர்வீகம் ஆந்திராவின் ஓங்கோல் பக்கம் கிராமம் என்றெல்லாம் செய்திகள் கசியதொடங்கிவிட்டன,
அங்கொரு கிராமத்தார் கருணாநிதி எங்கள் ஊர்க்காரர் என பெருமைபடுகின்றார்களாம், ஆனால் முக ஸ்டாலினை பற்றி ஒன்றுமே சொல்லமாட்டார்கள் போல, விஷயமுள்ள கிராமமக்களாக இருக்கலாம்
கருணாநிதி தமிழரா இல்லையா எனும் வாதத்துக்கு காரணம் யாரென்றால் சாட்சாத் அவரேதான்
ராம்சந்திரனை மலையாளி என அவர் அழைக்க தொடங்க, இவர் அவரை தெலுங்கர் என சொல்ல விஷயம் வெடித்தது
ஒரு கட்டத்தில் ராமசந்திரான் நான் தமிழக மன்றாடியார் பரம்பரை என சொல்லிவிட்டார்
“அவரா? அவர் மன்றாடியார் பரம்பரை அல்ல, டெல்லியில் மன்றாடிய பரம்பரை” என கலாய்த்தார் கருணாநிதி
இவர் அவரை மலையாளி என்பதும் அவர் இவரை தெலுங்கர் என்பதும் வாடிக்கையாயின
பின் இருவருமே தமிழகத்தில் இந்தவாதம் இருவருக்கும் நல்லதல்ல என முடிவு செய்து முதுக்குக்கு பின்னால் கைகுலுக்கி சிக்கலை முடித்து கொண்டார்கள்
அதாவது இருவருமே இருவரின் மூல அடையாளம் வெளிவராமல் ரகசியமாக காத்துகொண்டார்கள்.