கற்பனையன்றி வேறல்ல

செயற்கைகோள் பூமியினை ஊடுருவும், பாறையின் அடியில் இருக்கும் கனிமத்தை எல்லாம் உலகுக்கு எடுத்து சொல்லும் என்றொரு கோஷ்டி சொல்லிகொண்டிருக்கின்றது

அந்த அளவு துல்லியமான செயற்கைகோள்கள் எங்குமே இல்லை, இருந்திருந்தால் இந்த பின்லேடன், அல்பத்தாதி எல்லாம் என்றோ சோலி முடித்திருப்பார்கள்

ஈராணிய தரையடி அணுவுலை இன்னும் சில மர்ம அதிபர்களின் தரையடி பங்களாக்கள் எல்லாம் என்றோ காலியாகியிருக்கும்

செயற்கைகோள் நிறுத்தபடும் அவசியமே வேறு, வியாபார ரீதியானவை வேறு, ராணுவ விஷயங்கள் வேறு

இதில் பூமியினை ஊடுருவும் அபாரமான நுட்பமெல்லாம் இல்லை , அப்படி ஒன்று வரவும் வராது

பூமியினை கடும் பாறைகள் நிறைந்த இடத்தில் அசுர வேகத்தில் தோண்டுவதும் பாறைகள் மிகுந்த இடத்தில் சாத்தியமில்லை, அப்படி ஒரு நுட்பமும் வரவுமில்லை

ஏதோ செயற்கைகோளை ஏவிவிட்டால் வானிலிருந்தே நயந்தாரா வீட்டுக்குள் ஊடுருவி பார்க்கலாம் என்ற ரீதியில் யோசிப்பதெல்லாம் அபத்தமான கற்பனையன்றி வேறல்ல