கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை
“கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை” என்கின்றார் அவ்வையார்
அதாவது கணவன் தன் சொல்லுக்கும் மனைவி தன் சொல்லுக்கும் மாறாக நடவாமல் இருப்பதே கற்பு என தமிழகம் அன்றே இலக்கணம் வகுத்திருக்கின்றது
இது ஆண்களுக்கும் பொருந்தும்
கற்பு என்பது வாழ்க்கை நெறியே தவிர வேறொன்றுமல்ல
கர்ப்பகிரகம் என்று புனிதமாக சொல்வார்கள் அல்லவா? அப்படி புனிதமான ஒப்பந்தமாக அது அந்நாளில் சொல்லபட்டது
அதாவது கணவனும் மனைவியும் உடன்பாட்டோடு வாழ்வது
கர்ப்பம் என ஏன் சொன்னார்கள்? அக்காலகட்டத்தில் பெண்ணை மிக கவனமாக பார்த்துகொள்ள வேண்டும் என்பதற்காக
கற்பு என்பதும் அந்த நம்பிக்கை, மிக புனிதமாக பாதுகாக்க பட வேண்டும் என்ற சொல்லில் வந்ததேயன்றி வேறல்ல
கர்ப்பம் என்பதற்கு மூலம், தொடக்கம் என்றொரு பொருளும் உண்டு, ஆனுக்கும் பெண்ணுக்கும் அந்த நம்பிக்கையே மூலம்
இந்த கற்பழிப்பு என்ற வார்த்தையே சரியில்லாதது
இதனால்தான் ஆங்கிலத்தில் கற்பழிப்பும், வெறிநாய் கடியும், இந்த Rape, Rapist, Rabies (வெறிநாய் கடி) எல்ல்லாம் ஒரே வார்த்தையின் தழுவலாய் இருக்கின்றது
“வெறிபிடிதத”, “பைத்தியமான”, “வழிப்பறி, கொள்ளை”, “அறிவுகெட்ட” போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் இதற்கெல்லாம் லத்தீன் மொழியில் Repere என்று சொல்லிருக்கின்றது
அதிலிருந்துதான் என்ற Rape, Robbery போன்ற சொல் எல்லாம் ஆங்கிலத்துக்கு வந்தது
ஆக கற்பழிப்பு என்பதன் உண்மை சொல் “வெறிநாய் கடி”, “பைத்தியகாரன் கடி”, “மனநோயாளி செயல்” என்ற வார்த்தையே அன்றி வேறல்ல
கற்புக்கும் உடலுக்கும் சம்பந்தமே இல்லை, ஒரு காலமும் இல்லை
இதெல்லாம் இங்கு பல விஷயங்களுக்காக நம்ப வைக்கபட்ட வார்த்தைகள்.
ஆக இந்த கொடுமைக்கெல்லாம், வெறிநாய் கடித்தால் என்ன செய்யவேண்டுமோ அப்படி செய்ய வேண்டிய சிகிச்சையினை செய்துவிட்டு அந்த நாய் இன்னொருவரை கடிக்காமல் அடித்து கொல்வதே சரியான வழி
நாய் கடித்தது என வாழாமல் இருப்பவர்கள் யாரும் உண்டா? அப்படி இந்த நாய்களை கடந்து சென்றுவிட்டு வாழ்வதே சரி என மேல்நாட்டு வார்த்தைகளும் வாழ்க்கை முறைகளும் சொல்கின்றன
நல்ல விஷயங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அதை பின்பற்றுவது தவறல்ல