கலகலப்பு-2 200 நாள் ஓட வேண்டும்….
இந்த படத்தின் நடிகர்கள், நடிகை, கதை, இசை, நடிப்பு, ஓளிப்பதிவு, கேமரா கோணம், இயக்கம், எடிட்டிங், பன்ஞ் டயலாக் வெறுப்பு, கடி, இம்சை என எதுபற்றியும் கவலை இல்லை ஆனால் இப்படம் நிச்சயம் 200 நாள் ஓடவேண்டும்
காரணம் இப்படம் தங்க தலைவியால் தயாரிக்கபட்டிருக்கின்றது
இப்படத்தை உலகெல்லாம் பலமாதங்கள் ஓடவைக்க சங்கம் கடப்பாடு கொண்டிருக்கின்றது, தலைவியின் ஒவ்வொரு தொண்டனும் 100 முறை பார்க்க சங்கம் கட்டாய உத்தரவிடுகின்றது
இதுவரை படம் வந்தால் கதை, நடிப்பு, இயக்கம்,இசை,ஓளிப்பதிவு கோணம் என்றுதான் கவனிப்பார்கள். ஆனால் சங்கமோ இப்படம் மிக சிறந்த தயாரிப்பாளரால் தயாரிக்கபட்டிருக்கின்றது என்பதில் பெருமை கொள்கின்றது
இப்பொழுதே தலைவிக்கு சிறந்த தயாரிப்பாளர் விருதை எல்லா தரப்பும் (மத்திய அரசு உட்பட) எடுத்து தயாராக வைத்திருக்க சங்கம் கோரிக்கை வைக்கின்றது
இப்படம் மாபெரும் வெற்றியாக இப்படம் அமைய வேண்டும், அந்த வெற்றியினை தலைவிக்கு காணிக்கையாக்க வேண்டும்