கலங்காதே ராசாத்தி காலம் இருக்கு

Kushbu at Hospital.png

நன்றாக இருக்கின்றேன் என ஒருவார்த்தை சொன்னால் போதாதா? இந்த வீடியோ அனுப்பாவிட்டால் என்ன?

முகத்தில் களைப்போடு, முடியாத நிலையில் ரசிகர்களுக்காக நன்றி சொல்லும் தலைவியினை பார்க்க கண்ணீர் வருகின்றது.

இதையெல்லாம் நெஞ்சம் தாங்குமா? ரத்தம் நெஞ்செல்லாம் வழியாதா?

“கலங்காதே ராசாத்தி காலம் இருக்கு”


வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி.. நியாயத்திற்கு வெற்றி, தர்மத்திற்கு வெற்றி, தமிழக எதிர்காலத்தின் வெற்றி, காலத்தின் வெற்றி

வெற்றிமேல் வெற்றி

ஆம், தலைவிக்கு நடந்த அறுவை சிகிச்சை மிக வெற்றிகரமாக நடந்து அவர் நலமாக இருக்கின்றார்.

தலைவிக்கு நலம் கொடுத்த அந்த டாக்டர்களுக்கு நன்றிகள், விரைவில் சங்கத்து சார்பாக அவர்களுக்கு மிகபெரும் பாராட்டுவிழா நடக்கும்

அவர்களை தேரில் வைத்து இழுத்துவரவும் ரசிகபடை தயார்.

உலகெல்லாம் ரசிகர்கள் நடத்திய பிரார்த்தனையில் தலைவிக்கு இருந்த நலகுறைவு தீர்க்கபட்டுவிட்டது

“தெய்வமே.. தெய்வமே நன்றி சொல்வோம் தெய்வமே..”