கலைஞரை சந்திக்கிறார் நரேந்திர மோடி

Image may contain: 2 people, people smilingநான் மட்டும் இல்லீங்க, உங்க தமிழக பாஜக தலைவர்கள் பண்ணுற காமெடியில தமிழகமே சந்தோஷமா சிரிச்ச்சிட்டுதாங்க இருக்கு

இந்த சால்வை உங்களுக்காக ஷார்ஜா சுல்தான் கொடுத்துவிட்டதுங்க, அவரும் திமுகவில் ஒருத்தர்தான்”

 


Image may contain: one or more people“இவரை ஏன்யா இங்க கூட்டிட்டு வந்தீங்க..

சும்மா இருந்த நவாஸ் ஷெரிப் கூப்பிடாமலே பாகிஸ்தானுக்கு போய் தலையில கை வச்சவருய்யா இவரு , அதோட நவாஸ் காலி, குடும்பமே ஊழல் வழக்குல சிக்கிட்டு இருக்கு

போன்வருஷம் சசிகலா தலையில கைவச்சாருய்யா, அந்தம்மா முடிஞ்சிட்டு

இப்போ இங்க வந்திருக்காருய்யா, கனிமொழி தலையில கை வைக்காம பாத்துக்கோங்க, தயாளு தலையில கை வச்சிராம அவரை உள்ளே போக சொல்லுங்கய்யா..

இவர் ராசி தெரியாயம, அதுவும் தீர்ப்பு தேதி சொல்ற நேரம் இங்க கூட்டிட்டி வந்து போஸ் கொடுக்கிறீங்களாய்யா, நாசமா போச்சி”


கலைஞரை சந்திக்கிறார் நரேந்திர மோடி

ஆக தினதந்தியினை விட பெருமை வாய்ந்தது முரசொலி என மோடிக்கும் தெரிந்திருக்கின்றது

மோடியின் இந்த செயல் பாராட்டதக்கது, பெருந்தன்மைமிக்கது. இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரை. காங்கிரசுக்கு எதிராக இத்தேசத்தில் முதல்வெற்றி பெற்ற திமுக தலைவரை மோடி சந்திக்கவருவது வாழ்த்ததக்கது

இதில் அரசியல் ஏதும் இருப்பதாக தெரியவில்லை

தமிழ்சை & கோவும், திமுகவில் ரத்த கொதிப்பு அதிகம் உள்ளவர்களும் வாய்மூடி நிற்கும் நேரமிது

மோடிக்கு வாழ்த்துக்கள்

எஜமான் செல்லும்பொழுது அவருக்கு விசுவாசமான கணக்குபிள்ளைகள் செல்லவேண்டும் என்பதான் பொதுவான விஷயம்

இப்போது இருக்கும் கேள்வி என்னவென்றால், பாரத பிரதமர் கலைஞரை காண செல்லும்பொழுது தமிழக முதல்வர் அவருடன் செல்வாரா என்பதுதான்.

அப்படி சென்றுவிட்டால் இதோ “புரட்சி தலைவரின் விரோதியான‌ கலைஞருடன் சிரிக்கின்றார் பழனிச்சாமி” என கட்சியினரை உசுப்பேற்ற ஒரு வாய்ப்பு வராதா என தினகரன் கோஷ்டியும் ஏங்கி நிற்கின்றது.