“கலைஞர் அறிய” அம்மணி பதவி பிரமாணம் எடுக்கின்றாராம்

அந்த சகோதரி யாரென தெரியவில்லை, ஆனால் செய்தது மகா அபத்தம்

“கலைஞர் அறிய” அம்மணி பதவி பிரமாணம் எடுக்கின்றாராம்

பொதுவாக கடவுள் அறிய என்பார்கள், அதாவது எக்காலமும் வாழும் பரம்பொருள் எங்கும் நிறைந்த பரம்பொருள் என அதற்கு அர்த்தம்

செத்துபோனவர்கள் அறிய என யாரும் எடுக்கமாட்டார்கள்

ஒருவேளை செத்துபோன கலைஞர் எல்லாம் அறிந்து கொண்டிருப்பதுதான் பகுத்தறிவு என்றால், அவர்கள் பகுத்தறிவு ஆபத்தானது

அம்மா, கலைஞர் அறிய என்பது மூடநம்பிக்கை, அறிவில்லா மூட நம்பிக்கை

செத்துபோன ஒருவர் உங்களை எப்படி அறியமுடியும், வேண்டுமானால் அவர் சமாதியில் சென்று பேசசொல்லுங்கள் பார்க்கலாம்

“செத்தவர் எந்த காலத்திலடி பேசினார்..அறிவுகெட்டவளே”