கலைஞர் கற்றுகொண்ட பாடம் பெரிது

திமுக எப்படி வளர்ந்தது என்ற வரலாற்றினை பார்த்தால் இருவர் உதவியிருக்கின்றார்கள்

அன்றைய முதல்வர் குமாரசாமிராஜா மற்றும் பக்தவச்சலம்

இருவரும் என்ன செய்திருக்கின்றார்கள் என்றால் திமுகவின் போராட்டத்தை அடக்க கடுமையான நிலைப்பாட்டினை எடுத்திருக்கின்றார்கள், இதனால் திமுக வேகமாக வளர்ந்திருக்கின்றது

குமாரசாமி ராஜா, பக்தவச்சலமும் அடித்த அடி ஒவ்வொன்றையும் தன் படிக்கல்லாக மாற்றி வளர்ந்த இயக்கம் திமுக.

இதில் கலைஞர் கற்றுகொண்ட பாடம் பெரிது, இதனால் கடும் நெருக்கடிகளை கொடுத்து, ஏன் பதிலுக்கு பதில் பேசி கூட சிலரை வளர்த்துவிட கூடாது என மிக கவனமாக இருந்தார்

உண்மையில் சிலரை கண்டுகொள்ளாமல் விட்டால் அவர்கள் போக்கில் கத்திவிட்டு மரத்தில் முட்டி அழுதுவிட்டு கண்ணை துடைத்துவிட்டு சென்றுவிடுவார்கள்

கண்டுகொண்டால் “ஏய் எங்களை கண்டு அஞ்சுகின்றயா?” என குதிப்பார்கள்

சிலரை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது மரண தண்டனையின விட கொடுமையானது

இப்பொழுது பழனிச்சாமி அரசு அதனை அட்டகாசமாக செய்கின்றது

குமாரசாமியிடமும் , பக்தவச்சலமிடமிருந்து பன்னீரும் பழனிச்சாமியும் நிறைய படித்திருப்பார்கள் போல‌