கலைஞர் டிவியில் கலியுகம் என்ற நிகழ்ச்சி….

Image may contain: night

கலைஞர் டிவியில் கலியுகம் என்றொரு நிகழ்ச்சி ஓடுகின்றது, உலக வரலாற்றினை சொல்கின்றார்களாம்

அப்படி சோவியத்யூனியனை சொல்கின்றோம் என அதன் பெருமைகளை மறைத்து, ஏதோ ஒரு அமெரிக்க அடிவருடி ஆசிரியர் எழுதிய புத்தகத்தை வாசித்துகொண்டிருக்கின்றார்கள்.

சோவியத் யூனியன் எனும் சமதர்ம பூமிமீது பெரும் நம்பிக்கையும், அபிமானமும் கொண்டிருந்தவர் கலைஞர், செருப்பு தைக்கும் தொழியாளியான ஸ்டாலினை அதிபராக்கிய அந்த சோவியத் அவருக்கு பிடித்திருந்தது, தன் மகனுக்கு கூட ஸ்டாலின் என பெயரிட்டார்

அப்படி கலைஞர் மிக விரும்பிய சோவியத் யூனியனைத்தான், கலைஞர் டிவியில் மட்டம் தட்டுகின்றார்கள், அதன் பெருமைகளை மறைத்து என்னமோ பேசிகொண்டிருக்கின்றார்கள்

இதுதான் காலவிசித்திரம் என்பது

1960களில் திமுகவினை இயக்குவது சோவியத்திற்கு எதிரான முதாலளித்துவ நாடுகள், அவை இந்தியாவினை உடைக்க சிந்திக்கின்றன, அண்ணாவிற்கு அவைதான் கொம்பு சீவுகின்றன என்றெல்லாம் ஒரு பேச்சு உண்டு

கலைஞர் டிவி அதனை நிஜமாக்குகின்றது போலும்

இன்னொரு விசித்திரமும் உண்டு

கலைஞர் பகுத்தறிவுவாதி புராணம், கடவுள், கலி இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லை என சொல்பவர், நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் கலாய்ப்பார், கலி என கேட்டால் எனக்கு களி தெரியும், உடுத்தும் கைலி தெரியும் , கலி எனும் பெயரில் புரட்டர்களால் மக்கள் படும் வலி தெரியுமே அன்றி கலி என் ஒன்று கிடையாது.. என அவர் ஸ்டைலில்ல் சொல்லிகொண்டிருப்பவர்

அவரின் தொலைகாட்சியில் வரும் தொடர் “கலியுகம்”

கலிகாலத்தில் எல்லாம் தலைகீழாக நடக்கும் என்பார்கள், அதற்காக பகுத்தறிவு பகலவனின் டிவியிலும் “கலியுகம்” தொடர் ஓட வேண்டுமா?

நிஜமான கலிகாலம் போலிருக்கின்றது..