கலைஞர் நிலையும் அதுதான்
ஈழப்போர் முடியும் நேரம் சில தினங்களுக்கு முன் பிரபாகரன் வாய்விட்டு சொன்னான் “எல்லோரும் என் கையில்தான் எல்லாம் இருக்கின்றது என நினைக்கினம், ஆனால் என்ட கை வெறுங்கை”
கலைஞர் நிலையும் அதுதான், ஆனால் கடைசிவரை அதை விரித்துகாட்டாமல் மிக சாமார்த்தியமாக தன் இருப்பையும் பெயரையும் தக்கவைத்துவிட்டு சென்றுவிட்டார்
ஆனால் உபிக்கள் கொடுக்கும் பிம்பத்தில் அவன் இன்று இருந்தால் அழுதே விடுவார்
கன்னியாகுமரி சிலை விவகாரம் அவர் திட்டமிட்டு இந்துத்வாவினை தடுக்க செய்த காரியம் அல்ல, பல்வேறு அவசியங்கள் அவரை இழுத்து சென்றது, அவரும் தனக்கு எது லாபமோ அதை எப்பொழுதும் சரியாக செய்பவர் அல்லவா?
அவ்வளவு தீவிரமாக இந்துத்வாவினை எதிர்த்தவர், மாபெரும் இந்தி எதிர்ப்பு போல் அந்த விவேகானந்தர் மண்டபத்துக்கு எதிராக ஏன் போராடவில்லை என கேளுங்கள்,பதிலே வராது