கலைஞர் மனம் வெறுத்திருந்தார்
கடைசி காலங்களில் ராமதாஸ் போன்றோருடன் எல்லாம் அரசியல் செய்த கலைஞர் மனம் வெறுத்திருந்தார்
அந்த மைனாரிட்டி திமுக அரசு எனும் வார்த்தை அவரை ஈட்டியாக குத்தியெடுத்த நேரமது , காங்கிரஸின் தயவில் அவரின் ஆட்சி ஓடிகொண்டிருந்தது
“நேரு, இந்திரா என பெரும் ஜாம்பவான்களோடு அரசியல் செய்த நான் இந்த ராமதாஸ் , விஜயகாந்த் போன்றோரோடு அரசியல் செய்ய வேண்டுமா?” என தன்னை மீறி கட்சியில் நெருக்கமானவர்களோடு மனம் விட்டு பேசியதாக செய்திகள் வந்தன
அந்த காலகட்டத்தில் கலைஞர் வார்த்தைகள் எழுத்தாக இப்படித்தான் வந்தன
“காமராஜர் போன்றவர்களை எதிர்த்து அரசியல் செய்ததற்காக வருந்துகின்றேன், வேதனைபடுகின்றேன்”
ஆம் உங்கள் தலைவனே வாக்குமூலம் கொடுத்துவிட்டுத்தான் சென்றிருக்கின்றார்.
அதனால் இந்த முட்டு கொடுப்பது கம்பு சுத்துவது எல்லாம் தனியே பொட்டல்காட்டில் சுற்றிகொள்ளவும்